கம்யூனிஸ்ட் எம்பி வெங்கடேசனின் பொருளாதார அறிவு: பாடம் எடுத்த பா.ஜ.க மாநில செயலாளர் எஸ்.ஜி சூர்யா!
மதுரை எம்பியும், சி.பி.ஐ.எம் மாநிலச் செயலாளருமான வெங்கடேசன் வழக்கம் போல அடிப்படை ஆதாரம் இல்லாத பொய் தகவலை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். பாஜக ஆட்சிக் காலத்தில் ₹25 லட்சம் கோடி மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக ரிசர்வ் வங்கியின் ஆர்டிஐ அறிக்கை சொல்கிறதாம். மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில்ஆண்டுக்கு சராசரியாக ₹34,192 கோடி வாரா கடன் இருந்தது. அது மோடி ஆட்சியில் ஆண்டுக்கு ₹2.77 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என கூறியிருக்கிறார்.
தமிழக பாஜக மாநிலச் செயலாளர் முனைவர் எஸ்.ஜி. சூர்யா, சு.வெங்கடேசன் வெளியிட்ட பதிவுக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். வெங்கடேசன் பொய்யுரைகளுக்கு புள்ளி விவரங்களுடன் விளக்கம் கொடுத்துள்ளார்.
பாஜகவின் சூர்யா கொடுத்த விளக்கம்
வெங்கடேசன் அவர்களே சரிபார்க்கப்படாத RTI அடிப்படையிலான அறிக்கையை நம்ப வேண்டாம். நீங்கள் மேற்கோள் காட்டிய செய்தியில் ஆர்டிஐ தகவலே பகிரப்படவில்லை. எனவே நீங்கள் வெளியிட்ட தகவல் FakeNews ஆக இருக்கலாம். சில விளக்கங்களை சொல்கிறேன். நீங்கள் எதையும் புரிந்து கொள்ள மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். எனவே இதை பற்றி உங்களுக்கு சுருக்கமாக சொல்ல நல்ல நிபுணர்களின் உதவியை நாடுங்கள்.
Write Off என்பது வங்கியின் கணக்கு புத்தகங்களில் இருந்து மோசமான கடன்களை சட்டப்பூர்வமாக நீக்கி, வங்கியின் இருப்புநிலை குறிப்பை தெளிவாக பராமரிக்க செய்யப்படுகிறது. அப்படி செய்தால் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக அர்த்தம் இல்லை. அந்த கடனை திரும்ப பெறுவதற்கான சட்டபூர்வமான நடவடிக்கைகளை வங்கி தரப்பு மேற்கொள்ளும்.
முதலில் கடன்கள் ஏன் Write Off செய்யப்படுகிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வங்கி மோசடி, வங்கித் துறையின் தவறான மேலாண்மை போன்ற பல்வேறு சிக்கல்களால் வங்கித் துறை நெருக்கடியை எதிர்கொண்டது. மேலும் காங்கிரஸுடன் தொடர்பு கொண்ட பல தொழிலதிபர்கள் எளிதாக கடன் பெற்றனர். அவற்றில் பல திருப்பிச் செலுத்தப்படவில்லை. பாஜக ஆட்சி அமைந்த பிறகு, காங்கிரஸ் ஆட்சியில் வாங்கிய கடன்களை ஏராளமான முதலாளிகள் திருப்பிச் செலுத்தாதது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்த கடன்கள் செயல்படாத சொத்துகளாக மாற்றப்பட்டது. மோடி அரசு கடன் செலுத்தாதவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தது. வங்கிகள் தங்கள் இருப்புநிலைகளை பராமரிக்க, இந்த கடன்களை Write Off செய்தது. காங்கிரஸுடன் நெருங்கிய உறவு வைத்திருக்கும் ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கூட, "பெரும்பாலான வாராகடன்கள் காங்கிரஸ் காலத்தில் வாங்கப்பட்டவை" என்பதை ஒப்புக்கொண்டார்.