திருப்பதி கோவில் லட்டு காண்ட்ராக்டர் என்று பரவும் புகைப்படம்! உண்மை என்ன?
”இந்த ஏழை யாருன்னு தெரியுமா? இவர் தான் திருப்பதி கோயிலோட லட்டு காண்ட்ராக்டர்” என்று புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
உண்மை என்ன?
புகைப்படத்தில் இருப்பவர் ஏற்கனவே பலமுறை ஊடகங்களில் வந்துள்ளார். அவர் உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த கோல்டன் பாபா என்கிற சுதிர் குமார் மக்கர் என்று தெரிய வருகிறது. சுதிர் குமாரின் தங்கத்தின் மீதான காதல் காரணமாக கோல்டன் பாபா என்ற புனைப்பெயருடன் அழைக்கப்பாடுகிறார்.
இவருக்கும் திருப்பதி லட்டுக்கும் எந்த தொடபும் இல்லை. திருப்பதி கோவிலில் செய்யப்படும் லட்டுகள் அனைத்துமே திருமலை திருப்பதி தேவஸ்தானம் மூலமாக செய்யப்படுகிறது என்பதையும் உறுதி செய்ய முடிந்தது. திருப்பதி கோவில் லட்டு காண்ட்ராக்டர் என்று பரவும் புகைப்படம் போலியானது என தெரிய வருகிறது.