அமைச்சர் எ.வ.வேலு கருணாநிதிக்கு சைக்கிள் ரிக்ஷா ஓட்டினாரா? பரவி வரும் தகவல்! உண்மை என்ன?
கருணாநிதிக்கு சைக்கிள் ரிக்ஷா ஓட்டிய எ.வ.வேலு என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
உண்மை என்ன?
சமூக வலைதளத்தில் பரவும் படம் மே 11, 1991 அன்று சென்னை துறைமுகம் தொகுதியில் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது எடுக்கப்பட்டது என்றுள்ளது.
அமைச்சர் வேலு ஆரம்ப காலத்தில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார் என்று தெரிய வருகிறது. 1984ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் தண்டராம்பட்டு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஜானகி ஆணியில் சேர்ந்தார். பிறகு பாக்கியராஜ் ஆரம்பித்த கட்சியில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தார். ஜெயலிலலிதா தலைமையிலான அதிமுகவில் இணைய முயற்சி செய்தார். ஆனால் ஜானகி அணியைச் சார்ந்தவர் என்பதால் ஜெயலலிதா இவரை ஒதுக்கினார் என தெரிய வருகிறது.
பிறகு 2000ல் தான் அவர் தி.மு.கவில் இணைந்தார். இதனால் ரிக்சா தள்ளிக்கொண்டு வருபவர் அமைச்சர் வேலு இல்லை என்பது உறுதியாகிறது.
2000ம் ஆண்டில் தி.மு.க-வில் இணைந்த அவர் 2001, 2006ம் ஆண்டுகளில் தண்டராம்பட்டு தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்றும், அதன் பிறகு திருவண்ணாமலை தொகுதியில் இருந்து 2011, 2016, 2021 ஆகிய தேர்தல்களில் தேர்வு செய்யப்பட்டார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.