நடிகை ராஷ்மிகா மந்தனாவின் 7 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில் கவர்ச்சியாக கருப்பு நிற உடை அணிந்து, லிஃப்டின் வெளியே இருந்து உள்ளே வருவது போன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
வைரல் செய்யப்படும் வீடியோவின் உண்மையான வீடியோவில் இருப்பவர் பிரிட்டிஷ் இந்தியப் பெண்ணான ஜாரா படேல். இந்த வீடியோ முதன்முதலில் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த அக்டோபர் 9ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பரவி வரும் வீடியோவிற்கு வருத்தம் தெரிவித்துள்ள அவர், தன்னுடைய வீடியோவில் ராஷ்மிகா முகத்தை எடிட் செய்து வீடியோ உருவாக்கப்பட்டு உள்ளது. சமூக ஊடங்களில் பார்க்கும் எதையும் அதன் உண்மை தன்மையை சரிபார்க்காமல் நம்ப வேண்டாம் என்று தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
நடிகை ராஷ்மிகா மந்தனா தனது எக்ஸ் பக்கத்தில் பரவி வரும் இந்த வீடியோ குறித்து தனக்கு அதிர்ச்சியும் கவலையும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.