இந்தியாவில் பிளாஸ்டிக் முட்டைகள் தயாரித்து விற்கப்படுகிறதா?

Update: 2023-11-25 02:24 GMT

இந்தியாவில் பிளாஸ்டிக் முட்டைகள் தயாரிக்கப்படுவதைப் பாருங்கள் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.

Full View


உண்மை என்ன? 

வீடியோவில் காட்டப்படும் முட்டைகள் சீனாவில் குழந்தைகள் விளையாடுவதற்காக தயாரிக்கப்பட்ட பொம்மைகள் ஆகும்.  இணைய வணிகப் பக்கங்களில் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என்றும் தெரிய வருகிறது. 



இவ்வாறு பரவிய வீடியோ குறித்து, கடந்த 2018ல் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம் (FSSAI) ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில் “பிளாஸ்டிக் முட்டைகள் அல்லது செயற்கை முட்டைகள் என்பது கட்டுக்கதை. இயற்கையான முட்டையை ஒத்திருக்கும் முட்டைகளை உற்பத்தி செய்ய எந்த தொழில்நுட்பமும் இல்லை” என்று அதில் விளக்கமளித்திருந்தது. 

 



 






 

Similar News