"உத்தரகாசி சுரங்க விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் காட்சி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் வீடியோ பகிரப்பட்டு வருகிறது.
உண்மை என்ன?
கங்கோத்ரி - யமுனோத்ரி இடையே சார்தாம் புண்ணிய வழித்தட தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா- தண்டல்கான் இடையே சுமார் 4.30 கிலோ மீட்டர் தூரத்துக்கு மலையைக் குடைந்து சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சுரங்க பாதை பணி நிறைவடைந்தால் 28 கிலோமீட்டர் பயண தூரம் 4.30 கிலோ மீட்டர் தூரமாக குறையும். இதற்கான பணிகள் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.கடந்த 12-ஆம் தேதி அதிகாலை 5 மணி அளவில் சுரங்கத்தின் வெளிவாயில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் பாறைகள் இடிந்து விழுந்து மூடிக்கொண்டதால் பணியில் இருந்த 41 தொழிலாளர்கள் வெளியே வர முடியாமல் சுரங்கப்பாதைக்குள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணி இரவு பகலாக இடைவிடாது தொடர்ந்து நடந்து வந்தது. 17 நாட்கள் கடும் போராட்டத்திற்குப் பின்னர், அவர்கள் அனைவரும் உயிருடன் மீட்கப்பட்டனர். குறிப்பிட்ட சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் மீட்கப்படும் முன்பாக, NDRF தரப்பில் ஒத்திகை பார்க்கப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோதான் இப்போது பரவி வருகிறது.