"உலகில் வேகமாக வளரும் பொருளாதார நாடு இந்தியா" என்பதை திரிக்கும் திமுக ஐடி விங்!
உலகில் வேகமாக வளரும் இந்திய பொருளாதாரம் என்ற தகவல் பொய் என சில திமுக ஆதரவு சோஷியல் மீடியா கணக்குகள் மூலம் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன?
உலக நாடுகளின் சராசரிப் பொருளாதார வளர்ச்சி 2022இல் 3.5% இருந்தது. இது 2023-24இல் 3% குறையும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. இதுபோல் சர்வதேசப் பணவீக்கம் நடப்பாண்டில் 6.8% குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் அமெரிக்காவின் பொருளாதாரம் 1.5%, சீனா 5.2%, ஜப்பான் 1.4%, ஜெர்மனி -0.3% ஆக இருக்கும் என்றும் சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.
உலக நாடுகள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள போதிலும், இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியுள்ளது. உலக அளவில் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இந்த ஆண்டில் உலக அளவில் ஜிடிபி அடிப்படையில் பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனிக்கு அடுத்தபடியாக இந்தியா 5ஆம் இடத்துக்கு முன்னேறி உள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு மதிப்பு 3.75 லட்சம் கோடி டாலராகி உள்ளது. இந்தியாவின் வளர்ச்சி விகிதம் G20 நாடுகளில் இரண்டாவது மிக உயர்ந்தது என உலக வங்கியே கூறுகிறது.