மாடர்ன் தியேட்டர் உரிமையாளர் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்தாரா? கருணாநிதி சிலைக்காக அரசு வீண் பழி!

Update: 2023-12-16 03:45 GMT

சேலம் மார்டன் தியேட்டர் நுழைவு வாயில் இருந்த பகுதியை அகற்றிவிட்டு கருணாநிதி சிலை அமைக்கப்படுவதாக தகவல் வெளியானது. மார்டன் தியேட்டர் உரிமையாளர் குடும்பமும் அதை உறுதி செய்தது. 

இந்த சூழலில் பிறருக்குச் சொந்தமான இடத்தில் தனது தந்தையின் சிலையை அமைக்க முயற்சிப்பது, எக்காலத்திலும் அவரது தந்தைக்கோ, அவரது சிலைக்கோ எந்த வித மரியாதையையும் பெற்றுத் தராது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார். 

அமைச்சர் வேலு அவசர விளக்கம் 

சேலத்தில் முன்பு செயல்பட்டு வந்த மாடர்ன் தியேட்டர்ஸின் நுழைவாயிலில் சிலை அமைப்பதற்காக, அந்த இடத்தை கேட்டு, அரசின் சார்பில் நிர்ப்பந்திக்கப்படுவதாக செய்திகள் வந்துள்ளன.

இந்த நிறுவனம் செயல்பட்டு வந்த 8.9 ஏக்கர் நிலமானது, தற்போது, மனைகளாகவும், வணிகப் பகுதியாகவும் மாற்றப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த பகுதியின் நுழைவாயில் வளைவு சேலம் - ஏற்காடு நெடுஞ்சாலையில் கன்னங்குறிச்சி கிராமத்தின் சர்வே எண்.8இல் உள்ளது.

இந்த சாலையை விரிவாக்கம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதால், நெடுஞ்சாலைத்துறை நிலங்களின் எல்லைகளை நிர்ணயம் செய்வதற்காக, வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களால், 2.12.2023 அன்று, அளவீடு நடத்தப்பட்டுள்ளது.

இந்த அளவீட்டின்போது, மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயில் வளைவு முழுமையாக, நெடுஞ்சாலைத்துறை நிலத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. அரசின் நிலவரை படத்தில் உள்ளவாறு, எல்லைகளை வரையறுப்பதற்காக, நெடுஞ்சாலையினுடைய எல்லையில் எந்த சொத்துக்களுக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு, எல்லை கற்கள் நடப்பட்டுள்ளன.

மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயில் வளைவு, தற்போது நெடுஞ்சாலைத்துறையின் நிலத்திலேயே முழுமையாக அமைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், பழமையான இந்த நுழைவாயில் வளைவைப் பாதுகாத்து, பராமரிப்பது மட்டுமே அரசின் நோக்கம் என்ற அடிப்படையில், இந்தப் பகுதியில், வேறு கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கோ, சிலைகளை நிறுவுவதற்கோ அரசிடம் எந்த ஒரு திட்டமும் இல்லை.

எனவே, இந்த நெடுஞ்சாலைத்துறை இடம் தவிர, வேறு இடத்தைக் கேட்டு அரசுத்தரப்பில் நிர்ப்பந்திப்பதாக வெளிவரக்கூடிய தகவல்கள் அனைத்தும் தவறானவை என தெளிவுபடுத்தப்படுகிறது.

உண்மை என்ன?

"கலைஞர் கருணாநிதி சிலை வைக்க வேண்டும் என்று சிலர் தொந்தரவு செய்கின்றனர் "என மாடர்ன் தியேட்டர்ஸ் உரிமையாளர் வழக்கு தொடுத்ததிற்கு நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள் மாடர்ன் தியேட்டர்ஸ் உரிமையாளர்கள் என்று அரசு தரப்பில் கூறப்பட்டு உள்ளது. ஆனால் அந்த நிலம் பல காலம் மாடர்ன் தியேட்டர்ஸ் வசம் தான் உள்ளது என்பது ஆவணங்கள் மூலம் தெரிய வருகிறது. 






 


 





 

Similar News