தமிழகம் வருமானம் டாஸ்மாக்கை நம்பி இல்லையா? கதை அளக்கும் திமுகவினர்: இப்படி ஆதாரத்தோடு உடைச்சுட்டாங்களே!

Update: 2023-12-18 01:52 GMT

தமிழகத்தில் 5,329 மதுபானக் கடைகள் உள்ளன. கடந்த நிதி ஆண்டில் மட்டும் ரூ.44,985 கோடி தமிழக அரசாங்கத்துக்கு வருமானம் கிடைத்திருக்கிறது. கடந்த 2021-2022-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது சுமார் 8 ஆயிரம் கோடி வருமானம் கூடுதலாகக் கிடைத்திருக்கிறது. 2003-2004ல் இந்த வருமானம்  ரூ.3,639 கோடியாக மட்டுமே இருந்தது. 20 ஆண்டுகளில் 15 மடங்கு வருமானம் உயர்ந்துள்ளது. தரவுகள் இத்தனை தெளிவாக இருந்த போதிலும் தமிழகத்துக்கு டாஸ்மாக் மூலம் பெரிதாக வருமானம் கிடைக்கவில்லை. மற்ற மாநிலங்கள் தான் டாஸ்மாக் வருமானத்தை நம்பி உள்ளது என திமுகவினர் தவறான தகவலை பரப்பி, நல்லவர் வேஷம் போடுகின்றனர். 

உண்மை என்ன?

திமுகவினர் பரப்பும் வரைபடத்தில் இருப்பது வெறும் Excise Duty எனப்படும் கலால் வரி மட்டுமே. தமிழகத்தில் மதுவுக்கு VAT வரி தான் அதிகம். 2022-23ல் கலால் வரி 10401 கோடிகள் வசூலானது. VAT வரி 33697 கோடிகள் ஆக மொத்தம் 44098 கோடிகள் வருமானம் கிடைத்துள்ளது. ஆதாரம் வேண்டும் என்றால் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்கலாம். 

இணைப்பு இங்கே 

2022-23ல் தமிழகத்தின் மொத்த வருவாய் 2.42லட்சம் கோடி. அதாவது தமிழகத்திற்கு 18.22% டாஸ்மாக் மூலம் தான் வருவாய் கிடைக்கிறது. இதை மறைத்து பாஜக ஆளும் மாநிலத்தில் மது விற்பனை மூலம் அதிக வருமானம் கிடைக்கிறது என திமுகவினர் பரப்பி வருகின்றனர். 





இன்னும் விளக்கமாக தெரிந்துகொள்ள 


 


 




Similar News