மழை நிவாரண நிதி கொடுப்பது தமிழக அரசா? மத்திய அரசா? பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் திமுக ஐடி விங்!
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில், புயல் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, தலா 6,000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்க, மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 1,486.94 கோடி ரூபாய் ஒதுக்கி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் மத்திய அரசு ஸ்டிக்கர் ஒட்ட பார்க்கிறது. நாங்க மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தான் காசு கொடுக்கிறோம் என திமுகவினர் சொல்கின்றனர். அப்படி பார்த்தால் மத்திய அரசு கொடுத்த 1200 கோடியில் நாங்கள் கையே வைக்கல என்பது போல உள்ளது திமுகவினர் வாதம்.
உண்மை என்ன?
ஒவ்வொரு வருடமும் 1200 கோடி ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு ஒதுக்கப்படும். அதில் மத்திய அரசு 900 கோடியும், மாநில அரசு 300 கோடியும் பங்களிக்கும். அப்படி பார்த்தால் மாநில பேரிடர் நிவாரண நிதியில் 75 சதவிகிதம் மத்திய அரசு தான் கொடுக்கிறது. பேரிடர் மேலாண்மை நிதியாக, தமிழக அரசுக்கு ரூபாய் 450 கோடி வீதம் இரண்டு தவணைகளில், ரூபாய் 900 கோடி நிதி வழங்கியுள்ளது. பொதுமக்களுக்கு வழங்கப்படும் நிவாரண நிதி, மத்திய அரசு வழங்கியுள்ள இந்த பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்துதான் வழங்கப்படுகிறது.