குஜராத்துக்கு அள்ளி கொடுக்கிறாரா மோடி? திமுக ஐடி விங் பரப்பிய பொய் சில மணி நேரத்தில் சுக்குநூறானது!

Update: 2023-12-22 01:06 GMT

"குஜராத்துக்கு அள்ளி கொடுக்கும் மோடி, தமிழ்நாட்டை கண்டுகொள்ளாதது ஏன் ? " என திமுக தரப்பினர் போலி செய்தி பரப்பி வருகின்றனர். 

உண்மை என்ன?

மாநில பேரிடர் மீட்பு நிதி, தேசிய பேரிடர் மீட்பு நிதி என்பது சுனாமிக்கு பிறகு 2005-ல் தான் உருவாக்கப்பட்டது. இந்தியா முழுமைக்கும் இந்த நிதியானது முதலில் ரூபாய் 500 கோடியை கொண்டே துவங்கப்பட்டது. மாநில பேரிடர் மீட்பு நிதியில் மத்திய அரசின் பங்கு 75 விழுக்காடு. மீதி 25 விழுக்காடு மாநில அரசின் பங்கு. அனைத்து மாநிலங்களின் ஒத்திசைவோடு, ஆலோசனையோடு தான் மாநில பேரிடர் நிவாரண நிதி முடிவு செய்யப்படுகிறது.

ஒரு வருடத்தில் செலவிடப்படாத நிதி மறு வருட கணக்கில் வைக்கப்படும். உடனடி நிவாரணத்தை தவிர்த்து வேறு எதற்கும் இந்த நிதியை பயன்படுத்தக் கூடாது என்பது விதி. தேசிய பேரிடர் மேலாண்மை நிதி என்பது முழுமையாக மத்திய அரசு அளிக்கும் நிதி. பாஜக ஆட்சியில் தான் ரூ.10,000 கோடியாக உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 15-வது நிதி ஆணைய பரிந்துரைகளின் ஒதுக்கீட்டின்படி 2021-26 காலக்கட்டத்துக்கு ரூ.68,463 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 80 விழுக்காடு (ரூ.54,770 கோடி, 5 வருடங்களுக்கு) தேசிய பேரிடர் மீட்பு நிதிக்கு ஒதுக்கப்படும். கடந்த 2021-22 நிதியாண்டில் ரூ.6130 கோடியும், 2022-23ல் ரூ.8000 கோடியும், நடப்பாண்டுக்கு ரூ.8780 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

தேசிய, மாநில பேரிடர் நிவாரண நிதியானது, பாதிக்கப்பட்ட மக்களின் அவசர தேவைக்காக மட்டுமே செலவிடப்பட வேண்டும் என்பதும், உடனடி உதவி மற்றும் புனர்வாழ்வுக்காக மட்டுமே செலவிடப்பட வேண்டிய நிதி. பயிர் இழப்பு, சொத்துகள் சேதம் போன்றவற்றுக்குப் பொருந்தாது என்பது விதி. உதாரணத்துக்கு சாலைகள், கட்டுமானங்கள், கட்டமைப்புகளை மறு சீரமைத்தல் போன்றவற்றுக்கு பேரிடர் நிவாரண நிதியை செலவிட முடியாது. அதனடிப்படையில்தான் மாநில அரசுகள் இந்த நிதியிலிருந்து ஒதுக்கீட்டை கோர முடியும். செலவிட முடியும்.

கட்டமைப்புகள் உட்பட மற்ற சீரமைப்புகளுக்கான நிதியானது, அந்தந்த துறைகளின் நிதிநிலை மூலம் ஒதுக்கப்படும். உதாரணத்துக்கு, மின் துறை சார்ந்த செலவினங்கள் அந்த துறையின் ஆண்டுக்கான நிதி நிலை ஒதுக்கீட்டிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும். அதேபோல் விவசாய துறையில் ஏற்படும் இழப்புகள், காப்பீடு தவிர்த்து மற்றவை வேளாண் துறையிலிருந்து ஒதுக்கப்படும். நிலை இவ்வாறிருக்க, மாநில அரசுகள் மற்றும் எதிர்கட்சிகள் தொடர்ந்து தேசிய மற்றும் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இடம்பெற முடியாத செலவினங்களை மத்திய அரசிடம் கேட்பது, அதன்பின் மத்திய அரசு வஞ்சித்து விட்டது என்று சொல்வது வாடிக்கையாகிவிட்டது.


Similar News