வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாதா? பொய் செய்தி பரப்பும் சன் நியூஸ் - அப்படி ஒரு நடைமுறையே இல்லையாம்!

Update: 2023-12-23 01:44 GMT

தென்மாவட்ட வெள்ளப் பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக சன் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 

உண்மை என்ன? 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், இந்தியாவில் தேசிய பேரிடராக அறிவிக்கும் நடைமுறையே கிடையாது. மத்திய அரசு எந்த நிகழ்வுக்கும் அப்படி இதுவரையிலும் எந்த ஒரு மாநிலத்திற்கும் அறிவிப்பை வெளியிட்டதில்லை.

மற்ற மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் என்று அறிவிக்கப்பட்டது, தமிழகத்திற்கு மட்டும் அறிவிக்கப்படவில்லை என்று சொல்வது எல்லாம் உண்மை இல்லை.

மாநில அரசுகள் விரும்பினால் மாநில அளவில் எதையெல்லாம் பேரிடராக அறிவித்துக்கொள்ளலாம் என்பதற்கு NDMA வழிகாட்டுதல்கள் உள்ளன. அதன்படி "மாநில பேரிடர்" என்று மாநில அரசுகளே அறிவித்துக் கொள்ளலாம்" என கூறினார். 

உதாரணத்துக்கு 2004ல் சுனாமி வந்தபோது கூட, அன்றைய காங்கிரஸ் அரசு அதை தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை. ஒவ்வொரு மாநிலமும் தங்கள் பாதிப்புக்கு ஏற்ப அறிவிப்பு வெளியிட்டது. 

ஆனால் இப்போதைய மழை பாதிப்பை வைத்து திமுக மத்திய அரசின் மீது பழி போட்டு தப்பிக்க பார்க்கிறது. அதன் வெளிப்பாடே இது போன்ற செய்திகள். 




Similar News