#கிளம்பாக்கம்: நுழைவு வாயில் மட்டும் கட்டிவிட்டு முழு பஸ் ஸ்டாண்டும் கட்டியதாக ஸ்டிக்கர் ஒட்டிய திமுக!

Update: 2023-12-31 01:55 GMT

சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.400 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதை திமுகவின் சாதனை என குறிப்பிட்டு அக்கட்சியினர் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். 

உண்மை என்ன?

கடந்த 2016 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போதே கிளம்பாக்கம் பேருந்து முனையம் அமைக்க proposal போடப்பட்டு, 2018ஆம் ஆண்டு டெண்டர் விடப்பட்டு, 2019 ஆம் ஆண்டில் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் அடிக்கல் நாட்டப்பட்டு 2021ஆம் ஆண்டில் கட்டிட பணிகள் எல்லாம் கிட்டத்தட்ட முடிக்கும் தருவாயில் இருந்தது என்பதே உண்மை. 2021க்கு பிறகு பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயில் கட்டியதும், பஸ் ஸ்டாண்ட் வெளியே தேங்கும் மழை நீரை வெளியே கொண்டே செல்ல கால்வாய் கட்டியது மட்டும் தான் திமுக ஆட்சியில் புதிதாக நடந்துள்ளது. 

2021 ஏப்ரலில் எடுக்கப்பட்ட செயற்கைகோள் புகைப்படம் 



2018ல் எடுக்கப்பட்ட புகைப்படம் 




 


 



Similar News