பிரதமர் மோடி லைஃப் ஜாக்கெட் அணிந்து ஸ்நோர்கெலிங் செய்வதாக பொய் பரப்பும் திமுகவினர்!
பிரதமர் மோடி லட்சத்தீவில் 1,150 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக சென்றிருந்தார். அப்போது லட்சத்தீவில் பல்வேறு இடங்களுக்கு அவர் சென்றிருப்பது குறித்து புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
லைஃப் ஜாக்கெட் அணிந்து கொண்டு ஒருவரால் எப்படி ஸ்நோர்கெலிங்கோ செய்யமுடியும் என்று கூறி, பிரதமர் மோடி லைஃப் ஜாக்கெட் உடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
உண்மை என்ன?
பிரதமர் மோடி ஸ்கூபா டைவிங் மேற்கொள்ளவில்லை என்பதையும், ஸ்நோர்கெலிங் தான் முயற்சித்துள்ளார். ஸ்நோர்கெலிங்கிங் செய்யும் போது அதற்கான உடை அணிந்துகொள்வார்கள். இது பார்க்க லைஃப் ஜாக்கெட் போன்று இருந்தாலும், snorkel vest அணியும் போது தலை தண்ணீரில் மூழ்குமாறு Bib மற்றும் Head loop ஆகிய அமைப்புகளுடன் சேர்த்து வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் லைஃப் ஜாக்கெட் அணியும் போது தலை தண்ணீருக்குள் மூழ்காது. இரண்டு ஆடைகளுக்கும் உள்ள வேறுபாட்டை கீழே உள்ள வீடியோவின் மூலமும் நன்கு அறிந்து கொள்ளலாம்.