பென்னி குயிக் இந்துக்களுக்கு செய்த நன்மை என்ன? என அண்ணாமலை கேட்டாரா? திமுகவினர் பரப்பும் வதந்தி!

Update: 2024-01-20 01:36 GMT

நம்மை அடிமைப்படுத்திய பிரிட்டிஷ் அதிகாரிக்கு சிலை வைக்கிறது திமுக அரசு. சிலை வைக்கும் அளவுக்கு பென்னி குயிக் இந்துக்களுக்கு செய்த நன்மை என்ன? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேட்டதாக தகவல் பரவி வருகிறது. 

உண்மை என்ன?

2022 ஜனவரி 13ம் தேதி அண்ணாமலை பொங்கல் வாழ்த்து சொன்ன நியூஸ் கார்டு மட்டுமே கதிர் பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டது. அந்த கார்டினை எடிட் செய்து பென்னி குவிக் பற்றி அண்ணாமலை தவறாகப் பேசியதாகப் பரப்பப்படுகிறது. தமிழக அரசு சார்பில் லண்டனில் பென்னி குவிக்கிற்கு சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாகவே பென்னி குவிக்கிற்கு எதற்குச் சிலை என அண்ணாமலை பேசியதாக ஒரு தவறான தகவல் பரப்பப்பட்டு உள்ளது.




 



Similar News