ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு அழைக்கப்படவில்லையா? திமுகவினர் பரப்பும் தகவல்!
அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு பழங்குடி சமூகத்தவர் மற்றும் கைம்பெண் என்பதாலும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அழைக்கப்படவில்லை என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
உண்மை என்ன?
திரௌபதி முர்முவுக்கு ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு அனுப்பப்பட்டதா என்று தேடி பார்த்தோம். அப்போது விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் குடியரசுத் தலைவருக்கு அழைப்பு அளிக்கப்பட்ட செய்தி நமக்கு கிடைத்தது. விஷ்வ இந்து பரிஷத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக புகைப்படத்துடன் பதிவிட்டிருப்பதைக் காண முடிந்தது. 2024 ஜனவரி 12ம் தேதியே அவருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த புகைப்படத்தில் குடியரசு தலைவர் கையில் ராமர் கோவில் திறப்பு விழா அழைப்பிதழ் இருப்பதைக் காண முடிகிறது. இதன் மூலம் திரௌபதி முர்மு அழைக்கப்படவில்லை என்ற தகவலே தவறானது என்பது உறுதியாகிறது.