திமுக இளைஞரணி மாநாட்டு அரங்கம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்ததா? அட பாவத்த! இதுலயுமா!
பரவிய தகவல்:
திமுக இளைஞரணி மாநாட்டுக்காக சேலத்தில் அமைக்கப்பட்ட அரங்கம், உலகின் மிகப்பெரிய தற்காலிக மாநாட்டு அரங்கம் என்ற Unique World Records புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.இந்த அரங்கம் 9.50 லட்சம் சதுர அடி பரப்பளவில், 45 நாட்களில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உண்மை என்ன?
Unique World Records என்கின்ற நிறுவனம் கடந்த 2014 ஆம் ஆண்டு பஞ்சாப்பில் தொடங்கப்பட்டது என்றும் நாம் ஏதேனும் நிகழ்ச்சி நடத்தினால் அதனை அங்கீகரிக்க கட்டணம் அந்த நிறுவனத்திற்கு 45,000 முதல் 80,000 ரூபாய் வரை செலுத்தினால் ஒரு சான்றிதழ் கிடைக்கப் பெறும் என்பது நமது தேடலில் தெரிய வந்துள்ளது.
எப்படி யுனெஸ்கோ அவார்ட் வாங்க முடியாமல் "யுனெஸ்கோ மன்றம்" என்று சென்னையில் ஆரம்பித்து ஒரு கூட்டம் தனக்கு தானே அவார்ட் கொடுத்துக் கொண்டதோ அதே போல ஒரு இந்திய நிறுவனத்திடம் நாங்கள் பெரிய கூட்டம் கூட்டியிருக்கிறோம் அதற்கு ஒரு சர்டிஃபிக்கேட் கொடுங்கள் என்று காசு கொடுத்து வாங்கியதாகவே தெரியவருகிறது.