மத்திய அரசு கடன்களை வாங்கி குவிக்கிறதா? தமிழக ஊடகங்கள் சொல்வதும், உண்மையில் நடப்பதும்!
2024-25-ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் பிப்ரவரி 1 காலை 11 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்தார். சுமார் 57 நிமிடங்கள் பட்ஜெட்டின் மீது அவர் உரையாற்றினார்.மக்களவைத் தேர்தல் நிறைவடைந்த பிறகு பொறுப்பேற்கும் புதிய அரசு, முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும் என்பதால், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படவில்லை.
இந்த நிதிநிலை அறிக்கையில், இந்தியாவின் ஒட்டுமொத்த கடன் தொகை 14 லட்சம் கோடி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், கடந்த நிதியாண்டின் திருத்தியமைக்கப்பட்ட செலவினத் தொகை ரூ. 44.90 லட்சம் கோடி என்றும், உள்நாட்டு உற்பத்தி பற்றாக்குறை 5.8 சதவிகிதமாக இருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவின் கடன் மீதான செய்திகள் அதிக அளவில் பகிரப்படுகிறது.
மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து கடனை வாங்கி குவித்துள்ளது போல ஒரு மாய தோற்றத்தை உருவாக்க முயல்கிறார் இந்த செய்தியாளர்!
உண்மை என்ன?
வெளிநாட்டில் இருக்கும் வங்கிகள் மூலமாக குறிப்பாக World Bank, Asian Development Bank உள்ளிட்ட பல்வேறு வங்கி மற்றும் நிறுவனங்கள் மூலம் கடன் பெறப்பட்டு இங்கே வளர்ச்சித் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இது கடந்த கால காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ள ஒன்று தான்.
கடந்த 1991 ஆம் ஆண்டு 83.8 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த External Debt , 2014 ஆம் ஆண்டில் 446.2 பில்லியன் டாலராக ஆக உயர்ந்து இருந்தது. இதன் எண்ணிக்கை தற்போது 635.3 பில்லியன் டாலராக இருப்பதைதான் மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.