மத்திய அரசின் சாதனையை திமுக அரசின் சாதனை போல பரப்பும் முதல்வர் ஸ்டாலின்: உண்மை அதுலயே இருக்கே!

Update: 2024-02-05 01:51 GMT

பிரபல ஆங்கில நாளிதழான நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை ஒரு செய்தியை வெளியிட்ட நிலையில், அந்த செய்தியை மையமாக வைத்து தமிழகத்தின் பிரபல ஊடகம் ஒரு செய்தியை பதிவிட்டது. "மொத்த இந்தியாவும் பயணிக்கும் பாதையை தவிர்த்து தமிழ்நாடு வேறு வழிகளில் வெற்றி பெறுகிறது" - நியூயார்க் டைம்ஸ் புகழாரம் என அந்த செய்தி இருந்தது.

இதனை X சமூக வலைத்தளத்தில் திமுக ஆதரவாளர் ஒருவர், பேரறிஞர் அண்ணாவின் கனவுகள் நிஜமாகிக் கொண்டிருக்கும் தருணம் இது என்று பதிவிட அந்த பதிவை முதல்வர் ஸ்டாலினும் ரீட்வீட் செய்துள்ளார்.  

உண்மை என்ன?

சீனாவில் ஐபோன் தயாரிப்பு நடைபெற்று வந்த நிலையில், அங்குள்ள நிறுவனங்கள் எல்லாம் இந்தியா நோக்கி வருவதாக நியூ யார்க் டைம்ஸ் செய்தியில் குறிப்பிட்டுள்ளது. தமிழகத்தில் ஹயுண்டாய் கார் முதல் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உதிரி பாகங்கள் முதற்கொண்டு தயாரிக்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்த ஒன்று.

ஆனால், தமிழகத்தை நோக்கி வெளிநாட்டு நிறுவனங்கள் வருவது எல்லாம் திமுக அரசின் சாதனை போல தற்போது ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டு சமூக வலைதளங்களில் செய்தி பரப்பப்படுகிறது.

உண்மை என்ன என்பதை அந்த நியூயார்க் செய்தியிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, மத்திய அரசின் திட்டத்தின் மூலமாக தான் எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்புகளுக்கு 2021 ஆம் ஆண்டு முதல் மானியம் வழங்கப்படுகிறது என்பதும், அதன் காரணமாக தான் புது டெல்லி, நொய்டா போன்ற நகரங்களுக்கு நிறுவனங்கள் படையெடுப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆக, இப்படி ஒரு விஷயத்தை தெளிவாக மறைத்து திமுக அரசின் சாதனை என்று சொல்வது சரியா என்ற கேள்வியை முன்வைத்து சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.




 



Similar News