சென்னையில் குற்ற எண்ணிக்கை, விபத்து எப்படி குறைந்தது? புள்ளி விவரத்தையே மாற்றி இருக்காங்க!

Update: 2024-02-06 02:45 GMT

பரவி வரும் செய்தி 

2023ஆம் ஆண்டில் மட்டும் கோவையில் விபத்துகளால் 1,000க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த காலங்களில் விபத்துகள் எண்ணிக்கையில் தலைநகர் சென்னை தான் முதலிடத்தில் இருந்தது. ஆனால், இப்போது அது 15ஆவது இடத்திற்குச் சென்றுள்ளது.கோவை உடன் ஒப்பிடும் போது சென்னையில் உயிரிழப்புகள் 50% கீழ் தான் (500 உயிரிழப்புகள்) பதிவாகியுள்ளது. இரு மாவட்டங்களிலும் விபத்துகள் எண்ணிக்கை சமமாக இருந்தாலும் கூட அரசு அவசர சிகிச்சை வசதிகள் மற்றும் போக்குவரத்து விதிகளைக் கடுமையாக அமல்படுத்தியதன் காரணமாகச் சென்னையில் உயிரிழப்பு எண்ணிக்கை குறைவானதாக கூறப்படுகிறது. 

உண்மை என்ன?

நிர்வாக சிக்கல்களை களைய சென்னை காவல் ஆணையரகம், சென்னை, ஆவடி, தாம்பரம் என தனித்தனி காவல் ஆணையரகங்களாக பிரிக்கப்பட்டது. சென்னை காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட இடங்கள் மூன்றாக பிரிக்கப்பட்டதன் காரணமாக குற்ற எண்ணிக்கைகள், விபத்து எண்ணிக்கைகள் என அனைத்திலும் வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையில் விபத்துகள் குறைவாக உள்ளது போலவும், மற்ற மாவட்டங்களில் சென்னையை விட விபத்து அதிகம் நடப்பது போல தெரிகிறது. சென்னையில் குற்றங்கள் எண்ணிக்கை குறைந்தது வருவது போன்ற புள்ளி விவரங்கள் வெளியாவதும் இதனால் தான். 


Full View




Similar News