இனி அத்தை / மாமன் முறை மகன், மகளை திருமணம் செய்ய முடியாது என சன் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
உண்மை என்ன?
வட இந்தியாவில் அத்தை,மாமன் மகன்,மகள் திருமணம் வழக்கில் இல்லை. எப்படி தென்னிந்தியாவில் பெரியப்பா,சித்தப்பா,பெரியம்மா,சித்தி மகன்,மகள் திருமணங்கள் வழக்கத்தில் இல்லையோ அப்படியே வட இந்தியாவில் அத்தை முறையில் திருமணம் வழக்கில் இல்லை. அப்படி வழக்கில் இல்லாத ஒரு திருமண உறவை கசின் மேரேஜ் என்ற முறையில் ஏற்கனவே தடைசெய்யப்பட்ட ஒன்று தான். இந்து திருமண சட்டமும் அதையே தான் சொல்கிறது.
அதிகாரப்பூர்வமாக இந்து திருமண சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதை தான் உத்தராகண்ட் மாநில அரசு வெளியிட்டு உள்ள பொது சிவில் சட்டமும் சொல்கிறது. அதாவது அந்தந்த சமூகத்தின் வழக்கம் அனுமதிக்கும் பட்சத்தில் திருமணம் சட்டப்படி செல்லும் என்பதையே உறுதி செய்கிறது.
வட இந்தியாவில் பெரும்பாலும் உறவினர்களுக்குள்ளான திருமணங்கள் செய்யப்படுவதில்லை. இது தொடர்பாக இந்து திருமண சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தென் இந்திய மாநிலங்களில் சில சிறப்பு தளர்வுகள் இந்து திருமண சட்டத்தில் உள்ளன. வட இந்தியாவில் இருக்கும் வரை முறைகள் போல தென் மாநிலங்களில் பெரும்பாலும் இருப்பதில்லை.
வட இந்தியாவில் கலாச்சாரத்தில் பழக்கத்தில் இல்லாத ஒன்றை தடை செய்வதை தென்னிந்திய கலாச்சாரத்துடன் பொறுத்தி பீதியை கிளப்புகிறது சன்நியூஸ்.