சீக்கியர்களின் வாக்குகளைப் பெற பிரதமர் போட்டோ ஷூட் செய்வதாக கூறுவதா.. பின்னணி உண்மை என்ன..

Update: 2024-05-16 15:45 GMT

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் பீகார் தலைநகர் பாட்னாவில் தனது கட்சியின் 2024 லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக புகழ்பெற்ற தகாத் ஸ்ரீ ஹரிமந்திர் ஜி பாட்னா சாஹிப் குருத்வாராவுக்குச் சென்றார். அங்கு அவர் சமையலறையில் அங்கு இருக்கும் ஊழியர்களுக்கு உதவி செய்தார். மேலும் அவர் பக்தர்களுக்கு உணவு பரிமாறும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலானது ஆனால் இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் பிரதமர் கையில் காலியான பாத்திரத்தில் தான் உணவுகளை பரிமாறியதாக தவறான குற்றச்சாட்டுகளை சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது.


ஆனால் உண்மையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உணவு பரிமாறும் காட்சிகளில் அவர் கையில் வைத்திருக்கும் பாத்திரத்தில் கீர்(பாயசம்) இருந்தது நம்மால் கவனிக்க முடிகிறது. ஆனால் சிலர் வேண்டுமென்றே பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எதிராக காலி பாத்திரத்தில் பக்தர்களுக்கு உணவு வழங்குவது போல அவர் போட்டோஸ் சூட் செய்கிறார் என்ற தலைப்புகளுடன் அவருடைய ஸ்கிரீன்ஷுட் சமூக வலைத்தளத்தில் உலா வருவதும் முற்றிலும் தவறானது மற்றும் போலியானதும் கூட.


பத்தாவது சீக்கிய குருவான குரு கோவிந்த் சிங்கின் பிறப்பிடமாக முக்கியத்துவம் வாய்ந்த தகாத் ஸ்ரீ பாட்னா சாஹிப் குருத்வாராவிற்கு மே 13, 2024 அன்று பிரதமர் சென்றார். மோடி தலைப்பாகை அணிந்து, பக்தர்களுக்கு உணவு பரிமாறும் போது கீர் வாளியை கையில் வைத்திருந்தார். ஆனால் இது பற்றி எக்ஸ் வலைதளங்களில் குறிப்பிடும் நபர்கள், "நரேந்திர மோடி சேவை செய்யவில்லை, வரும் லோக்சபா தேர்தலுக்காக பஞ்சாபில் போட்டோ ஷூட் செய்கிறார். மோடி உணவு பரிமாறுகிறார் என்பதை நிதானமாக கவனியுங்கள்" என்ற தலைப்புடன் X இல் புகைப்படம் வெளியிடப்பட்டது. வரும் லோக்சபா தேர்தலில் சீக்கியர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக பரிமாறும் பாத்திரத்தில் உணவு இல்லை இந்தியாவில் வாழும் இதயமற்ற ஆன்மா மீது அவருக்கு எந்த உணர்வும் இல்லை" என்று அந்த ஒரு நபர் குறிப்பிட்டு கூறியிருக்கிறார் இந்த ஒரு போஸ்ட் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் இது முற்றிலும் போலியானது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News