மாட்டின் கோமியத்தை விற்பனை செய்ய அரசு அனுமதி வழங்கியதா... உண்மை தகவல் என்ன?
இந்தியாவில் தற்பொழுது அதிகமாக பகிரப்படும் புகைப்படங்களில் ஒன்றாக பசு மாட்டின் கோமியத்தை பாட்டில் அடைத்து வைத்து அதை விற்பனை செய்ய இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அனுமதி வழங்கி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அது தொடர்பான புகைப்படங்கள்தான் தற்போது வைரலாகி வருகிறது. ஆனால் இது முற்றிலும் உண்மையானதா? போலியானதா? என்பது தொடர்பான உண்மைச் செய்தி தான் தற்போது வெளிவந்து இருக்கிறது.
பசுவதை சட்டத்தை கட்டாயம் மோடி அரசு நிறைவேற்றுவோம் என்ற ஒரு கட்டாயத்தில் இருக்கிறார்கள் இந்நிலையில் வேண்டும் என்று சிலர் பசுமாட்டின் கோமியத்தை விற்பனை செய்வதற்கு அரசு அனுமதித்து இருப்பதாகவும் அதன் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் விற்பனையை சில நிறுவனங்கள் தொடங்கி இருப்பதாகவும் புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகிறது. இது முற்றிலும் போலியானது என்று அதிகாரப்பூர்வமான அமைச்சகத்தில் இருந்து தகவல்கள் வெளிவந்து இருக்கிறது.
இது குறித்து அவர்கள் கூறும் பொழுது, "WhatsApp இல் பரவும் ஒரு படம், FSSAI (இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்) குறிக்கப்பட்டு மாட்டின் சிறுநீரை பாட்டில்களில் அடைக்கப்பட்டு சந்தையில் விற்கப்படுவதாக கூறுகிறது. இது தொடர்பாக PIB Fact Check கூறுவது இந்த கூற்று போலியானது. இந்த தயாரிப்புக்கான உரிமம் எதையும் வழங்கவில்லை" என்று கூறி இருக்கிறார்கள்.
Input & Image courtesy:News