'கோ பேக் மோடி' போஸ்டரை கையில் வைத்து நின்றாரா? வானதி சீனிவாசன்.. வைரல் புகைப்படத்தின் உண்மை தன்மை என்ன?

Update: 2024-06-05 07:18 GMT

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் ஆன்மிக ஓய்விற்காக சென்று இருந்தார். அவரது வருகையின் போது, ​​சென்னையின் திமுக வழக்கறிஞர் ஒருவர் கோ பேக் மோடி என்ற போஸ்டர்களை ஒட்டினார். அதேபோல் பாஜக மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் அவர்கள் கோ பேக் மோடி என்ற வாசகத்துடன் அடங்கிய போஸ்டரை கையில் வைத்து நின்றாரா? இந்த போட்டோவின் உண்மை பின்னணி என்ன? தற்போது கோவையில் ஆதியோகி சிலை முன்பு நின்று கொண்டு "கோ பேக் மோடி" என்ற போஸ்டரை அவர் வைத்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.


ஃபேஸ்புக் பயனர் ஒருவர் இந்த ஒரு புகைப்படத்தை பகிரும் பொழுது, "அந்தப் பெண் சத்குருவின் ஆசிரமத்தின் முன் ‘கோ பேக் மோடி’ என்ற பதாகையுடன் நிற்பது வேடிக்கையாக இருக்கிறது” இன்று கருத்துக்களை கூறி புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார் ஆனால் இதன் உண்மை தன்னை என்னை என்பது தற்போது ஆராயப்பட்டு இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி மகிளா மோர்ச்சாவின் தேசியத் தலைவரும், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் அவர்கள், அக்டோபர் 24, 2021 தேதியில் X-இல் பதிவான ஒரு புகைப்படத்தை தான் இவர்கள் எடிட்டிங் செய்து தவறாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.


உண்மை பதிவில், "100 கோடி தடுப்பூசிகள் என்ற மைல்கல்லை கடந்ததற்கு பிரதமர் மோடிக்கு சீனிவாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது கையில் இருந்த பலகையில், "இந்தியா வரலாறு படைக்கிறது. 100 கோடி தடுப்பூசி. நன்றி மோடி ஜி" என்று எழுதப்பட்டிருந்தது. இதன்மூலம், பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வாசக அட்டையை ஏந்தியபடி இருக்கும் பழைய புகைப்படம், ‘கோ பேக் மோடி’ என டிஜிட்டல் முறையில் எடிட் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News