அண்ணாமலைக்கு ‘ஒரே வாக்கு’ தான் கிடைத்ததா? பகிரப்படும் வைரல் புகைப்படத்தின் உண்மை என்ன?

Update: 2024-06-07 06:14 GMT

2024 லோக்சபா தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட போது, ​​தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் தொகுதியின் முடிவுத் தாளைக் காட்டும் ஒரு படம் சமூக ஊடகங்களில் வெளிவந்தது. எந்தெந்த வாக்கு சாவடியில் எத்தனை வாக்குகளை பெற்றிருக்கிறார்கள்? என்பது தொடர்பான புகைப்படம் தான் அது. அதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு வாக்குச் சாவடியில் ஒரு வாக்கு மட்டுமே பெற்றதாக அந்தப் படத்தில் கூறப்பட்டுள்ளது. கோவை தொகுதியில் அண்ணாமலை போட்டியிட்டார்.


மேலும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு ஒரு வாக்குச் சாவடியில் ஒரு வாக்கு மட்டுமே பெற்றதாக அந்தப் படத்தில் கூறப்பட்டுள்ளது. கோவை தொகுதியில் அண்ணாமலை போட்டியிட்டார். தேர்தலின் போது திமுக முன்னிலையில் இருந்த காரணத்திற்காக அண்ணாமலையின் தோல்வியை கிண்டல் செய்யும் வகையில் இந்த படம் சமூக வலைதளங்களில் பரவலாக பரவியது.


இந்த புகைப்படம் குறித்து தவறுதலாக மக்கள் மத்தியில் பகிரப்பட்டு இருக்கிறது. உண்மையில் இந்த புகைப்படத்தில் 101 வாக்குகளுக்கு பதிலாக ஒரு வாக்கு மட்டும் இடம் பெற்று இருப்பது தெரிய வந்து இருக்கிறது. மேலும், இதே சாவடியில் அதிமுக வேட்பாளர் ராமச்சந்திரன் 24 வாக்குகளும், திமுக வேட்பாளர் கணபதி பி.ராஜ்குமார் 164 வாக்குகளும் பெற்றதாக உண்மை ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கோவை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள எந்தச் சாவடியிலும் அண்ணாமலை ஒற்றை இலக்கத்தில் வாக்குகளைப் பெறவில்லை என்பது உண்மை ஆகும்.

Input & Image courtesy:News

Tags:    

Similar News