காங்கிரஸ் தலைவரின் காலை கழுவியத் தொண்டர்.. வீடியோ பின்னணி.. பா.ஜ.க கடும் கண்டனம்..

Update: 2024-06-19 07:38 GMT

மகாராஷ்டிராவில் மாநில காங்கிரஸ் தலைவர் காலை தொண்டர் ஒருவர் கழுவும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ உண்மைதான். மஹாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல் காலை தொண்டர் ஒருவர் கழுவும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. நானா படோல், வடேகான் நகரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இருந்தார். தொடர்ந்து அங்கு இருக்கும் துறவி மடத்தில் தரிசனம் செய்தார். பிறகு, காருக்கு திரும்பும் போது காலில் சகதி பட்டது.


நானா படோல், காரில் அமர்ந்த படி காலை வெளியே வைத்தார். அப்போது அங்கு இருந்த தொண்டர் ஒருவர், அவரது காலை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. மேலும் இந்த வீடியோ உண்மை கிடையாது பொய் என்று பல்வேறு கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  ஆனால் இவை உண்மைதான் என்றும் மாநில தலைவரே ஒப்புக் கொண்டிருக்கிறார். இதற்கு கண்டனம் தெரிவித்த மும்பை பாஜக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

அதில் அவர்கள் கூறும்போது, "தங்களின் வாழ்க்கைக்காக போராடும் தொண்டரை அவமானப்படுத்தும் காங்கிரசின் செயல் துரதிஷ்டவசமானது. தொண்டரை, தனது காலை கழுவ வைத்தது கண்டனத்திற்குரியது. இது தான் காங்கிரசின் கலாசாரமா? எனக் கேள்வி எழுப்பினார். அதிகாரத்தில் இல்லாத போது மக்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதை எண்ணி பார்க்க வேண்டும். அவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார்கள்? நானா படோல் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றும் அறிக்கையில் கூறியிருக்கிறார்கள்.

Input & Image courtesy:News

Tags:    

Similar News