பூமியை நோக்கி வரும் விண்கல்.. மிகப்பெரிய பேரழிவாக இருக்குமா? உண்மை பின்னணி என்ன?
நம்முடைய சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டு அறிவியலில் மாயாஜாலங்கள் ஏராளமாக இருக்கின்றன. குறிப்பாக அவற்றில் சில உறுதியாக சொல்ல கூடிய தகவலாக இருக்கும், மேலும் சில நிகழலாம் அல்லது நிகழாமல் போகலாம் என்பது மாதிரியான தகவலாக தான் இருக்கும். இந்நிலையில் பூமியை நோக்கி விண்கல் ஒன்று வேகமாக வந்து கொண்டிருப்பதாகவும், விரைவில் நாம் மிகப்பெரிய பேரழிவை சந்திக்க இருக்கிறோம்? என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் விரைவாக செய்தி பகிரப்பட்டு வருகின்றது. அவற்றின் உண்மை தன்மையை குறித்து தற்போது பார்க்கலாம். ஆனால் இந்த செய்திகள் குறித்த உண்மை தன்மையை சரிபார்த்தபோது, சில மாறுபட்ட தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
மேலும் ஒரு குறிப்பிட்ட தினத்தை சொல்லி, அன்றுதான் கடைசி நாள் என்றும், அன்றைய தினம் விண்கல் பூமியின் மீது மோதப்போகிறது என்றும் செய்திகளில் குறிப்பிடப்பட்டிருக்கும். அப்படி கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் இதேபோன்ற செய்திகள் அதிகம் பகிரப்பட்டு இருந்தது. ஆனால் இந்த செய்தியின் உண்மை தன்மை குறித்து சில அப்டேட்கள் இப்போது கிடைக்கப்பெற்றிருக்கின்றன. அதாவது, அமெரிக்காவின் கிரக பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அலுவலகம், ஃபெடரல் எமர்ஜென்சி மேனேஜ்மென்ட் ஏஜென்சி, அமெரிக்க விண்வெளி விவகாரங்களுக்கான மாநில அலுவலகம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து டேபிள்டாப் எக்சசைஸை நடத்தியுள்ளன. சுருக்கமாக பூமியை நோக்கி விண்கல் வருமா? வராதா? அப்படி வந்தால் எப்படி சமாளிப்பது? என்று எல்லாம் இந்த அமைப்புகள் இணைந்து பேசி வருகிறார்கள். இப்படி அவர்கள் பேசும் பொழுது 14 ஆண்டுகளுக்கு முன்பு எப்பொழுது விண்கல் பூமியை நோக்கி மோதும் என்பதை துல்லியமாக அறிந்து கொண்டால் மிகப்பெரிய பேரழிவை தடுக்க முடியும் என்று கூறியிருக்கிறார்கள்.
ஆய்வாளர்கள் சொன்னது என்ன?
இப்படி இவர்கள் விவாதிக்கும் போது, 14 ஆண்டுகளுக்கு முன்னரே பூமியை விண்கல் தாக்கும் என்று நாம் தெரிந்துக் கொண்டால் கூட ஏற்பட போகும் பேரழிவை நம்மால் தடுக்க முடியாது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஆக மொத்தத்தில் விண்கல் பூமி நோக்கி வருகிறது என்பது உண்மை தகவல் தான். ஆனால் அவை எப்பொழுது மோதும் என்பது தற்போது வரை துல்லியமாக கண்டறியப்படவில்லை.
Input & Image courtesy:News