கிறிஸ்தவ மதமாற்ற நோட்டீஸ்.. வீடு, வீடாக சென்ற பத்து பெண்கள்.. உண்மை பின்னணி?

Update: 2024-07-12 02:36 GMT

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கல்லுப்பட்டி கிராமத்தில் மதமாற்றம் நடப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக இது தொடர்பான வீடியோவை இந்து முன்னணி தன்னுடைய அதிகாரப்பூர்வமான சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார்கள். அந்த வீடியோ காட்சிகள் தான் தற்போது வைரலாக அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது. ஏனென்றால் ஒன்றல்ல, இரண்டல்ல சுமார் 10 பெண்கள் அடங்கிய குழு ஒன்று சேர்ந்து வீடு, வீடாக சென்று மதமாற்ற செயலில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

பொதுவெளியில் எவ்வளவு தைரியமாக பத்து பெண்களும் கையில் ஒரு நோட்டீஸ் உடன் ஒவ்வொரு வீடாக சென்று கிறிஸ்தவ மதத்திற்கு மதமாற்றும் செயலில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இது தொடர்பாக இந்து முன்னணி தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கங்களில் கூறும் பொழுது, "இந்துக்கள் வாழும் பகுதியில், தூத்துக்குடியில் இருந்து வந்த பத்து பெண்கள் வீடு வீடாக கிறிஸ்தவ மதமாற்ற நோட்டீஸ் கொடுத்தனர்.


இந்த தகவல் அறிந்து அங்கு சென்ற இந்து முன்னணி பொறுப்பாளர், காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து மதமாற்றம் செய்ய முயன்றவர்களை தடுத்து நிறுத்தினார். அது மட்டும் கிடையாது தற்போது கிராமங்களில் மிகவும் சுலபமாக அதிகமாக இந்து மக்கள் வசிக்கும் பகுதிகளை கண்டறிந்து, அங்கு தான் மதமாற்ற முயற்சிகள் அதிகமாக நடந்து வருவதாகவும், மக்கள் எப்பொழுதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் இந்து முன்னணி அறிவுரையை கூறி இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News