மத்திய அரசின் இந்த வலைதளம் முற்றிலும் போலி.. மக்களே உஷார்.. வலியுறுத்திய அமைச்சகம்..
சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரிப்பதன் காரணமாக நாளுக்கு, நாள் போலியான தகவல்களும் அதிகமாக பரவி வருகின்றது. அதிலும் குறிப்பாக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும், குறிப்பாக நான் மட்டும் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு போலியான வலைத்தளங்கள் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. அந்த வகையில் தற்போது மத்திய அரசின் வேளாண் துறையில் வேலை வாய்ப்புகள் இருப்பதாக கூறி போலியான இணையதளம் இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
மத்திய வேளாண் அமைச்சகம் புதிதாக தற்போது வேலைவாய்ப்புகளுக்கான அறிவிப்பை வெளியிட்டதாக அந்த இணையதளத்தில் ஒரு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதில் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் ரூ.1675 ரூபாயை செலுத்தி தங்களுடைய விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது. இந்த ஒரு செய்தி வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இவை முற்றிலும் பொய் என்று தற்போது மத்திய அமைச்சகம் செய்தியை வெளியிட்டு இருக்கிறது.
இது தொடர்பாக மத்திய அரசின் சார்பில் கூறும் பொழுது, "rashtriyavikasyojna.org என்ற இணையதளம் பல்வேறு பதவிகளுக்கான வேலைகளை வழங்குவதாகக் கூறி விண்ணப்பக் கட்டணமாக ஒவ்வொரு விண்ணப்பதாரர்களிடமிருந்து ₹1,675 செலுத்த அழைப்பு விடுத்து இருக்கிறது. ஆனால் இது முற்றிலும் போலியான தகவல். இதை நம்பி எவரும் இதில் பணம் செலுத்த வேண்டாம்" என்று கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy:PIB