பிரதமர் மோடிக்கு கோயில் கட்டிய விவசாயி.. தினமும் சூடம் ஏற்றி வழிபாடு செய்கிறாரா? ஏன்?

Update: 2024-07-15 11:26 GMT

திருச்சியை அடுத்துள்ள ஏற்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் பிரதமர் மோடிக்காகக் கோயில் ஒன்றைக் கட்டியுள்ளார். மேலும் அவர் கட்டிய கோவிலில் தினமும் அவர் சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து வழிபாடு செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த கோயிலுக்கு நாள் தவறாமல் அவர் தினமும் சிறப்பு வழிபாடும் செய்து வருகிறாராம். பிரதமர் மோடியின் திட்டங்களால் பலன் பெற்றதாகவும் இதன் காரணமாகவே கோயில் கட்டியதாகவும் அந்த விவசாயி தெரிவித்தார்.


பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆட்சியின் கீழ் இந்தியாவில் கொண்டு வந்த திட்டத்தின் மூலமாக அவர் பயன் பெற்றதாகவும், அதனால் தான் அவர் தற்போது இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாகவும் பெருமையாக கூறியிருக்கிறார். பிரதமர் மோடியின் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி போன்ற நலத்திட்டங்களால் ஈர்க்கப்பட்டதாகவும், இதன் காரணமாக மோடிக்குக் கோயில் கட்ட முடிவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியின் திட்டங்கள் விவசாயிகளுக்கு நல்ல பலனைத் தருவதை உணர்ந்ததாகக் கூறும் விவசாயி சங்கர், இதனால் தனது வருமானமும் அதிகரித்ததாக நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.


பிரதமர் மோடியின் மார்பு அளவு சிலை இருக்கும் நிலையில், தினசரி இந்தச் சிலைக்கு இரண்டு புறமும் விளக்குகளை ஏற்றி பிரார்த்தனை செய்கிறார். இது பற்றி விவசாயி சங்கர் கூறும் பொழுது, "பிரதமர் மோடி நீண்ட நாட்களுக்கு நலமுடன் வாழ வேண்டும். அடுத்த முறையும் அவரே பிரதமராக வர வேண்டும். மேலும், விவசாயிகளுக்கான இன்னும் பல நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும்" என தெரிவித்தார்.

Input & Image courtesy:News

Tags:    

Similar News