வங்காளத்தில் இந்து கோவில் கட்டிடம் ஒன்று தீப்பற்றி எரியும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த தகவலில், “பங்களாதேஷில் தீ வைத்து கொளுத்தப்படும் இந்து கோவில்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக வங்காளத்தில் நடைபெற்று வரும் இந்துக்களுக்கு எதிரான போராட்டத்தின் போது இந்து கோவில்களும் சூறையாடப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறது.
இது தொடர்பான வீடியோவின் உண்மை தன்மை என்பது குறித்து ஆராய்வோம். வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வங்கதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் சிறுபான்மை மக்களான இந்துக்களைத் தாக்குவதாக இந்தியாவில் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த சூழலில், வங்கதேசத்தில் இந்து கோவில் ஒன்று தாக்கப்பட்டது என்று வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
வங்கதேசத்தில் எரிக்கப்பட்ட இந்து கோவில் என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் இடம் கோவில் இல்லை. அது இந்து கோவில் இல்லை உணவகம் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆதாரங்கள் அடிப்படையில் வங்கதேசத்தில் இந்து கோவில் எரிக்கப்பட்டது என்று பரவம் தகவல் தவறானது என்பது உறுதி செய்யப்படுகிறது.
Input & Image courtesy: News