பங்களாதேஷில் இந்துக்கள் மீது தாக்குதல் என்று வைரலாகும் வீடியோ... பின்னணி உண்மை என்ன?
பங்களாதேஷில் வீடுகளை இழந்து கூடாரங்களில் வசிக்கும் இந்துக்கள் மீது இஸ்லாமியர்கள் தாக்குதல் நடத்தியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அங்கு கூடாரங்களில் வசிக்கும் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப் பட்டுள்ளது. இந்த தகவலில், “பங்களாதேஷில் கூடாரங்களில் இந்துக்கள் மீது இஸ்லாமியர்கள் நடத்தும் கொலை வெறி தாக்குதல் இந்து எதிராக இனப்படுகொலையைக் கொண்டாடி வருகின்றனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். ஆனால் இந்த வீடியோ உண்மையா? என்பது குறித்து தற்போது ஆராயப்பட்டது. பங்களாதேஷில் தற்போது உள்நாட்டுக் கலவரம் தீவிரமாக இருந்த போது, இந்தியாவில் டெல்லிக்கு அருகே உள்ள காசியாபாத்தில் டென்டில் வசித்துவந்த இஸ்லாமியர்கள் வங்கதேசத்தைச் சார்ந்தவர்கள் என்று கூறி தாக்கப்பட்டனர்.
ஆனால், இந்தியாவில் வங்கதேச இஸ்லாமியர்களுக்கு பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது என்று கூறி வைரலாக பகிர்ந்து வருகிறார்கள். ஆனால் உண்மையில் இந்த வீடியோ உண்மையாக இங்கு எடுக்கப்பட்டது கிடையாது. ஏற்கனவே பங்களாதேஷில் நடந்த உள்நாட்டு கலவரத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.
Input & Image courtesy: News