தேசிய கீதத்தை தமிழில் மொழிபெயர்த்து பாடும் ஆசிரியர்.. வீடியோவின் பின்னணி என்ன?

Update: 2024-08-28 08:48 GMT

தமிழக ஆசிரியை ஒருவர் தமிழில் இந்திய தேசிய கீதத்தை மொழி பெயர்த்துப் பாடியுள்ளார் என்று ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வெகுவாக வைரல் ஆக்கி வருகிறது. ஆனால் இது ஒரு பழைய வீடியோ என்பதும் தெள்ளத் தளிவாக தெரிய வருகிறது. ஆசிரியை மற்றும் பள்ளி மாணவர்கள் பாடும் பாடல் ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் அந்த ஆசிரியை, “நேஷனல் ஆன்தமை தமிழில் பாடப்போகிறோம்” என்கிறார்.


அதைத் தொடர்ந்து, "இனங்களும், மொழிகளும் ஆயிரம் இருந்தும், மனங்களில் பாரத தாயே" என்று தொடங்கும் பாடலை, இந்திய தேசிய கீதத்தின் மெட்டில் பாடுகிறார். ஆனால், அதற்கும் இந்திய தேசிய கீதத்தின் அர்த்தத்திற்கும் நேரடித் தொடர்பு இல்லை. இந்த வீடியோவின் உண்மை தன்மை குறித்து ஆராயும் பொழுது தமிழ் ஆசிரியை இன் ஒரு புதிய முயற்சியாக தேசிய கீதத்தை தமிழில் மொழிபெயர்க்கும் ஒரு புது முயற்சியாக தான் இது பார்க்கப்படுகிறது. இதைத் தவிர இது முழுமையாக தேசிய கீதத்தை தமிழில் மொழிபெயர்க்கவில்லை.

இந்த வீடியோ திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே இருக்கும் சேவூர் அரசு உயர்நிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியையான இவான்ஜிலின் பிரிஸில்லா என்பவர் புது முயற்சியாக தேசிய கீதத்தை தமிழில் மொழிபெயர்க்கும் ஒரு செயலை கையில் எடுத்து இருக்கிறார். இதன் மூலம் தமிழில் பாடப்பட்ட இந்திய தேசிய கீதம் இல்லை என்பதும், தேசிய கீதம் சாயலில் உருவாக்கப்பட்ட பாடல் என்பதும் தெளிவாகிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News