வங்கதேசத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதா? வைரல் வீடியோவின் உண்மை என்ன?

Update: 2024-08-29 10:40 GMT

வங்காளதேசத்தில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது என்றும், அதன் அருகே உள்ள உள்ள கட்டிடத்தில் இஸ்லாமியர்கள் தொழுகை  செய்கிறார்கள் என்றும் சமீபத்தில் வீடியோ ஒன்று பெரும் வைரலானது. மேலும் இந்த தகவலில், "பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கு" என்று குறிப்பிடப் பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். வங்கதேசத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 17 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவின் திரிபுராவில் ஏற்பட்ட அதிகபட்ச மழை காரணமாக இந்த வெள்ளம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.


இந்நிலையில், வங்கதேசத்தில் வெள்ளத்துக்கு நடுவே இஸ்லாமியர்கள் தொழுகை செய்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ உண்மையில் வங்கதேச வெள்ளத்தில் எடுக்கப்பட்டதா? என்று அறிய முதலில் ஆய்வு செய்யப்பட்டது. அதன் முடிவில் இந்த உண்மையை கண்டோம்.


ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பாகிஸ்தான் வெள்ளத்தில் இந்த மசூதி பாதிக்கப்பட்டதாக செய்தி, வீடியோ கிடைத்தது. மேலும் மீண்டும் அந்த மசூதி கட்டப்பட்ட வீடியோக்களும் கிடைத்தன. இந்த வீடியோவில் உள்ள இடமும், ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இடம் பெற்ற காட்சிகளும் ஒன்றாக உள்ளது. எனவே இது ஒரு பழைய வீடியோ என்பது தெளிவாக தெரிகிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News