கல்வியை அரசியலாக்குவது தான் தி.மு.க அரசின் முக்கிய நோக்கமா? தமிழக பா.ஜ.கவின் சரமாரியான கேள்வி?

Update: 2024-09-01 16:12 GMT

சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின்(SSA) ஒருங்கிணைந்த அங்கம்தான் “PM SHRI திட்டம்” என்பதையும், தேசியக் கல்விக் கொள்கை 2020-இன் விதிகளை செயல்படுத்துவதுதான் SSA-வின் முதன்மையான நோக்கம் என்பதையும் உணராமல், வழக்கம் போல் திரித்துப் பேசி தங்கள் வார்த்தை ஜாலங்களால் தமிழக மக்களைக் குழப்ப முயற்சிக்கிறது திமுக என தமிழக பாஜக தன்னுடைய அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை வெளியிட்டு இருக்கிறது. மேலும் இதில் அவர்கள் கூறும் பொழுது, ஒருங்கிணைந்த அங்கமான “PM SHRI” திட்டத்தின் மூலம் சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தை செயல்படுத்த விரும்பாத திமுக அரசு, அதற்கான நிதியை மட்டும் கேட்பது ஏன் என்பதுதான் எங்களுடைய எளிமையான கேள்வி?

தேசியக் கல்விக் கொள்கையின் சிறப்பம்சங்களை முறையாக செயல்படுத்துவதற்காக, செப்டம்பர் 2022-ல் சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின்(SSA) ஒருங்கிணைந்த அங்கமாக “PM SHRI” திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆகவே தான், 2023-ஆம் ஆண்டு வரை SSA-விற்கான நிதி தமிழகத்திற்கு வழங்கப்பட்டது. மேலும், “PM SHRI” திட்டத்தை செயல்படுத்தாத மாநிலங்களுக்கு, SSA-விற்கான நிதியை தங்களால் வழங்க இயலாது என்பதை, நமது மத்திய அரசு மிக தெளிவாக விளக்கிக் கூறிய பிறகுதான், திமுக அரசின் அப்போதைய தலைமைச் செயலரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் அவர்களும், “PM SHRI” திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழகம் கையெழுத்திட விரும்புவதாகக் கூறினார்கள்.


அவர்கள் கூறியபடி, ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானதா? “PM SHRI” திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டதா?கையெழுத்திடாத ஒரு திட்டத்திற்கான நிதியை எவ்வாறு வெளியிட முடியும்?குறிப்பாக, இத்தகைய போலி நாடகங்கள் மூலம், பள்ளிக் கல்வித் துறையின் நிர்வாகத் திறனின்மையை மறைக்க முயலும் திமுக அரசிற்கு, 2021-22 மற்றும் 2022-23 ஆம் ஆண்டுகளில் சமக்ர சிக்ஷா திட்டத்தின்(SSA) கீழ், செலவழிக்கப்படாமல் இருக்கும் மொத்த நிதியான ரூ.273.37 கோடியைப் பற்றி மக்களுக்கு விளக்கிக் கூறும் திராணி உள்ளதா? என்பதுதான் எங்களின் அடிப்படையான கேள்விகள்? என தமிழக பாஜக அதிரடியாக கேள்விகளை எழுப்பி இருக்கிறது.


மேலும், நமது மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதாப் அவர்கள், "சமக்ர சிக்ஷா"(ஒருங்கிணைக்கப்பட்ட பள்ளிக்கல்வி) திட்டத்தை செயல்படுத்தக் கோரி, 9 முறை தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். அதன்படி, மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, “PM SHRI” திட்டத்தின் மூலம், தேசியக் கல்விக் கொள்கையை செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU), திமுக அரசு கையெழுத்திட்டால் அனைத்தும் சரியாகிவிடும்.


ஆனால், தேசியக் கல்விக் கொள்கையைப் புறக்கணித்த திமுக அரசு, “மாநிலக் கல்விக் கொள்கை” கொண்டு வரப்படும் என்று கூறி 3 ஆண்டுகளாகிய பிறகும், அக்கொள்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது. இவ்வாறு, தேசிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்காமல், மாநிலக் கல்விக் கொள்கையைக் கொண்டு வருவோம் என்ற பொய்யான தகவல்கள் மூலம், மக்களை திசை திருப்பி கல்வியை அரசியலாக்குவது தான், திமுக அரசின் முக்கிய நோக்கம் என்பது மீண்டுமொரு முறை நிரூபணமாகியுள்ளது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News