அம்மன் சிலையை அகற்ற முயன்ற தி.மு.க அரசு.. இந்து முன்னணி வைக்கும் குற்றச்சாட்டு உண்மையா?
சேலம் கடை வீதி பகுதியில் இருந்த அம்மன் சிலையை அகற்ற திமுக அரசு உயர்ந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறார்கள். இந்து முன்னணியினர். இந்து முன்னணி அமைப்பினரின் துரித செயல்காரணமாக கடைவீதி பகுதியை இருந்த அம்மன் சிலை அகற்றப்படாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக சமூக வலைத்தள பக்கங்களில் அவர்கள் கூறும் பொழுது, "திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான அரசு பதவியேற்றதில் இருந்து தொடர்ந்து தமிழகத்தில் பல கோவில்கள் இடிக்கப்படுவது தொடர் கதையாகியுள்ளது. இப்போதாவது இந்துக்கள் விழித்து கொள்ள வேண்டும். தெருவுக்கு தெரு அரசியல்வாதிகளின் சிலைகள் சாலையை மறித்து நிற்கிறது.
வேற்று மதத்தினர் இடங்களை அகற்ற நீதிமன்ற உத்தரவு இருந்தும் அதிகாரிகள் செயலிழந்து நிற்கிறார்கள். இந்துக்கள் என்றால் மட்டும் இவர்களுக்கு ஏளனமாக தருகிறதா என்பது தெரியவில்லை இந்துக்களின் மனதை புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே அம்மன் சிலைகள் அளக்கற்றப்பட்டதாக குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறார்கள். ஆனால் இந்து கோவில்கள் மட்டும் இலக்கு வைத்து இடித்து தள்ளுகிறது இந்து விரோத திமுக அரசு. மேலும் திமுக அரசு இந்த மாதிரியான நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து இருக்கிறது" இந்து முன்னணி.
Input & Image courtesy: News