பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா? திருப்பதி, பழனிக்கு நெய் சப்ளை செய்யும் ஒரே உரிமையாளர்.. பின்னணி என்ன?
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதத்தில் விலங்குகள் கொழுப்பு கலக்கப்பட்டதாக . முந்தைய ஆட்சியில் திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு சோ்க்கப்பட்டதாக தேசிய ஜனநாயக கூட்டணி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டினாா். இதையடுத்து, திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய் குஜராத்தில் உள்ள தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் சிஏஎல்எஃப் ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
அதில் பன்றி கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை லட்டு தயாரிப்பில் கலந்துள்ளதாக ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு எழுப்பிய நிலையில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வாறு விலங்கின் கொழுப்பு கலக்கப்பட்ட நெய்யை வழங்கிய நிறுவனம் மீது அனைவரின் பார்வையும் தற்போது திரும்பி இருக்கிறது.
அந்த வகையில் தமிழகத்தில் பழனி முருகன் கோவிலில் தயாரிக்கப்பட்ட பிரசாதங்களிலும் இந்த ஒரு நிறுவனத்தின் நெய் தான் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு தற்போது எழுந்து இருக்கிறது. குறிப்பாக திமுக அரசு அந்த ஒரு நிறுவனத்திற்கு தான் டெண்டர் வழங்கி இருப்பதாக குற்றச்சாட்டு தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சனாதான தர்மத்திற்கு எதிராக இத்தகைய நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறை அனுமதித்து இருக்கிறதா? திமுக அரசு விரிவான விளக்கங்களை தர வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் தொடர்ச்சியாக கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள்.
Input & Image courtesy: News