லிப்ஸ்டிக் போட்டது குத்தமா? பெண் டபேதாரை இடமாற்றம் செய்த மேயர் பிரியா.. உண்மை என்ன?
சென்னை மாநகராட்சியின் முதல் பெண் டபேதார் மாதவி, உரிய நேரத்தில் பணிக்கு வராதது, அலுவலக உத்தரவை பின்பற்றாதது உள்ளிட்ட காரணங்களுக்காக மணலி பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி மேயரின் தபேதார் என்ற முறையில் மாநகராட்சி மேயர் பிரியாவுடன், மாதவி அரசு விழாக்களில் பங்கேற்பது வழக்கம். மாதவி கொடுத்த சர்ச்சை பதில், அப்போது பணிக்கு உரிய நேரத்துக்கு வராதது, அலுவலக உத்தரவை பின்பற்றாதது என அடுத்தடுத்து மெமோ கொடுக்கப்பட்டது. அலுவலக உத்தரவை பின்பற்றாதது தொடர்பான மெமோவுக்கு தபேதார் மாதவி கொடுத்துள்ள பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த மொமோவுக்கு பதிலளித்த மாதவி, தாங்கள் தன்னை லிப்ஸ்டிக் பூசாதே என்று கூறியதாகவும், அதை மீறியது குற்றமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். லிப்ஸ்டிக் பூசக்கூடாது என்பதற்கான அரசு உத்தரவு இருந்தால் அதை காட்டுங்கள்," என்றும் மாதவி பதிலளித்தார்.
மேயரின் தனிப்பட்ட உதவியாளர் சிவசங்கருக்கு இந்த விளக்கத்தை மாதவி எழுதி அனுப்பினார். இதனைத் தொடர்ந்து, மாதவி மேயரின் அலுவலகத்திலிருந்து மணலி பகுதிக்கு மாற்றப்பட்டார்த. ஃபதார் பணியிடம் காலியாக உள்ளது. ஆனால், இந்த இடமாற்றத்துக்கும் லிப்ஸ்டிக் அணிந்ததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மேயர் பிரியா கூறியுள்ளார். மாதவி இடமாற்றத்திற்குப் பிறகு சென்னை மேயர் அலுவலகத்தில் தஃபதார் பணியிடம் காலியாக உள்ளது.
50 வயதான எஸ்.பி. மாதவி, மேயர் ஆர்.பிரியாவின் தனிப்பட்ட உதவியாளர் சிவசங்கரிடம் தன்னையோ அல்லது யாரையும் லிப்ஸ்டிக் அணிந்து வேலைக்குச் வர வேண்டாம் என்று கேட்டு கொண்ட சில நிமிடங்களில் இடமாற்ற உத்தரவு பெற்றதாகக் கூறப்படுகிறது. இது குறித்து மாதவி கூறும் போது, அரசாங்க உத்தரவை எனக்குக் காட்டுங்கள், "நீங்கள் என்னை உதட்டுச்சாயம் அணிய வேண்டாம் என்று கேட்டீர்கள், ஆனால் நான் அவ்வாறு செய்தேன். இது ஒரு குற்றமாக இருந்தால், நான் உதட்டுச்சாயம் அணிவதைத் தடைசெய்யும் அரசாங்க உத்தரவை எனக்குக் காட்டுங்கள்" என்று சங்கரின் ஆகஸ்ட் 6 மெமோவுக்குப் பதிலளித்தார்.
Input & Image courtesy: News