லெபனானில் மீது இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதல்.. பரவும் வைரல் வீடியோ உண்மை என்ன?

Update: 2024-09-27 16:49 GMT

லெபனானில் இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதல் என்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியான வண்ணம் வைரலாகி வருகிறது அது உண்மையில் லெபனானில் இஸ்ரேலில் நடந்த தாக்குதலா? அல்லது யாரும் சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள் என்பது குறித்த ஆய்வு தான் இது. சமூக வலைதளங்களில் பல்வேறு செய்திகளை உண்மை என்று அறியாமல் பலரும் அதிகமாக பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் இந்த ஒரு வீடியோவும் அதிகமாக மக்களால் பகிரப்பட்டு வருகிறது.

குறிப்பாக அந்த வீடியோவில் ஒரு கட்டிடம் வெடித்துச் சிதறுவது போல் ஒரு பதிவு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "லெபனானில் இஸ்ரேல் ருத்ர தாண்டவம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாத இயக்கம் மீது இஸ்ரேல் பேஜரை வெடிக்க வைத்துத் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.


இதைத் தொடர்ந்து இரு தரப்பினரும் தாக்குதலில் ஈடுபடத் தொடங்கினர். இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை ஹிஸ்புல்லா செலுத்தியது. பதிலடியாக இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலில் லெபனான் மீதான தாக்குதல் வீடியோ என்று சிலர் பழைய வீடியோக்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் இது ஒரு பழைய வீடியோ இந்த வீடியோவை எடிட்டிங் செய்து தற்போது நடந்த வீடியோவாக மாற்றி தவறான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.

Input & Image courtesy:News

Tags:    

Similar News