ஆவணங்களை காண்பிக்க மறுத்து தி.மு.க ஒன்றிய கவுன்சிலர்.. போலீஸாருடன் வாக்குவாதம்.. உண்மை என்ன?

Update: 2024-10-05 16:43 GMT

வேலூர் மாவட்டத்தில் தமிழக போலீஸார் வாகன பரிசோதனையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து வாகனங்களையும் பரிசோதித்த பிறகு தான் அவர்கள் அனுமதி வழங்கி இருக்கிறார்கள். இந்நிலையில் அகரத்தைச் சேர்ந்த திமுக ஒன்றிய கவுன்சிலர் சுதாகர் என்பவர் தன்னுடைய வாகனத்திற்கான ஆவணங்களை சரியாக காண்பிக்கவில்லை. குறிப்பாக போலீசாரிடம் கரராகவும் பேசியிருக்கிறார். தன் திமுககாரர் என்றும் தன்னால் ஆவணத்தை காட்ட முடியாது என்பது போல் கூறியதாக தகவல்கள் வெளியாக இருக்கிறது.


இதன் காரணமாக திமுக ஒன்றிய கவுன்சிலருக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த வாக்குவாதம் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக மாறி பல்வேறு வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து ஸ்தம்பித்து நின்றது. சிறிது நேரம் இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அனைத்து கட்சிகாரர்களும் ஒன்று சேர்ந்த பிறகு பெரும் பிரச்சினையை கிளப்பியிருக்கிறார்கள்.

உரிய ஆவணங்களை காண்பித்து இருந்தால் போலீசார் அவரை செல்ல அனுமதித்து இருப்பார்கள். ஆனால் எந்த ஒரு ஆவணமும் தன்னிடம் இல்லை அதை காட்ட முடியாது என்பது போல் போலீசாரிடம் கூறவே, இந்த நிலை ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆளும் கட்சி அதிகாரத்தில் இருப்பதன் காரணமாக இத்தகைய அராஜகங்கள் பெரும்பாலான இடங்களில் அரங்கேறி வருவதாக சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Input & Image courtesy:News

Tags:    

Similar News