மத்திய அரசின் 'நமோ ட்ரோன் தீதி' திட்டம்: தமிழக பயனாளிகளுக்கு வழங்கப்பட்டதா?
நமோ ட்ரோன் தீதி திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 44 பெண்களுக்கு ட்ரோன்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் துறை இணையமைச்சர் ராம்நாத் தாக்குர் தெரிவித்துள்ளார். மக்களவையில் தூத்துக்குடி தொகுதி திமுக உறுப்பினர் கனிமொழி எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய இணையமைச்சர் ராம்நாத் தாக்குர் வியாழக்கிழமை எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் தெரிவிக்கும் போது, பெண்கள் தலைமையிலான சுய உதவிக் குழுக்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களைப் பயன் படுத்துவதற்காக ட்ரோன்களை வழங்கும் மத்திய அரசின் திட்டம்தான் 'நமோ ட்ரோன் தீதி திட்டமாகும்.
2023-24 முதல் 2025-26 வரையிலான 3 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 15,000 ட்ரோன்களை வழங்கி நிலையான வணிகம் மற்றும் வாழ்வாதாரத்துக்காக உதவி செய்யும் நோக்கில் இத்திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. 2023-24 ஆம் ஆண்டில் முன்னணி உர நிறுவனங்கள் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 1,094 ட்ரோன்களை வழங்கின. இந்த 1,094 ட்ரோன்களில் 500 ட்ரோன்கள் நமோ தீதி திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் அளித்த தகவல்படி, 2023-24-ஆம் ஆண்டில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு 44 ட்ரோன்கள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி மகளிர் சுய உத விக் குழுவைச் சேர்ந்த உஷா லட்சுமி என்ற பெண்ணுக்கு ட்ரோன் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வழங்கப்பட்ட 44 பேர்களில் 9 பேர் பட்டி யல் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள 35 பேர் இதர பிற் 5 படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.