திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: தமிழக அரசு தரப்பில் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு!
மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பான வழக்குகளில் தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. இந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறும் போது, "திருப்பரங்குன்றம் மலையின் உரிமையாளர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகம். மலை மீதுள்ள சுல்தான் சிக்கந்தர் தர்காவிற்கு, தர்கா, அதன் முன்புறமுள்ள கொடிமரம், நெல்லித்தோப்பு, அங்கிருந்து தர்காவிற்கு செல்லும் படிக்கட்டு, புதுமண்டபம் தவிர மலையிலுள்ள பிற அனைத்துப் பகுதிகளும் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமானவை. சிலர், மலை மீது ஆடு, மாடு, கோழி பலியிட, மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.
ஹிந்து மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலர் ராமலிங்கம், 'பக்ரீத் பண்டிகையையொட்டி, கோவிலுக்குச் சொந்தமான பாதையை மறைத்து நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்த தர்கா நிர்வாகிகள், முஸ்லிம்கள் முயற்சிக்கின்றனர். 'தொழுகை நடத்த தடை விதிக்க வேண்டும்' என, பொதுநல மனு தாக்கல் செய்தார்.மனுக்களை நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எல்.விக்டோரியா கவுரி அமர்வு விசாரித்தது.
தமிழக அரசு தரப்பு, 'எவ்வித பிரச்னை, பாகுபாடின்றி மத நல்லிணக்கம் பாதுகாக்கப்பட அரசு விரும்புகிறது' என கூறினார். திருப்பரங்குன்றம் மலையில் ஜனவரி 18ஆம் தேதி ஆடு கோழிகளை அறுத்து சம்மந்தி விருந்து கொடுக்கப்படும் என முஸ்லிம் அமைப்புகள் தெரிவித்தனர். போலீசார் அதை எச்சரிக்கை செய்து ரத்து செய்துள்ளனர். தற்பொழுது மீண்டும் பிப்ரவரி 18 ஆடு கோழிகளை அறுத்து சமபந்தி விருந்து கொடுக்கப்படும் என முஸ்லிம் ஐக்கிய ஜமாத் பேரில் அறிவிப்பு வெளியானது. அதன் தலைவர் அப்துல் காதர் இது பொய்யான தகவல் எங்களுக்கும் இந்த அறிவிப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எங்கள் நற்பெயருக்கு களங்கம் விளைக்கும் செயல், அதனால் அவதூறு பரப்பி அவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்படும் என கூறினார்.