அரசு பஸ்ஸை இளைஞர் கடத்தியது உண்மையா? நடந்தது என்ன?

Update: 2025-02-15 13:29 GMT

மதுபோதையில் அரசு பஸ்சை கடத்திச் சென்ற நபரை திருவான்மியூர் போலீசார் கைது செய்தனர்.திருவான்மியூரில் இருந்து கோவளம் செல்லும் அரசு பஸ் திருவான்மியூர் பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு நிறுத்தப்பட்டு இருந்த, இந்த பஸ்ஸை நள்ளிரவில் முகம் தெரியாத நபர் ஒருவர் திருடி சென்றதாக திருவான்மியூர் போலீசருக்கு புகார் அளிக்கப்பட்டது.


நீலாங்கரையில் அந்த பஸ்ஸை மடக்கி பிடித்த போலீசார், அதில் ஒரு நபர் தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்தனர். அவரை அழைத்து விசாரித்த பொழுது அவர் பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்த ஆப்ரஹாம் ( என்பது தெரியவந்து இருக்கிறது. ஓடும் பஸ்ஸில் கண்டக்டர் உடன் சில்லறை கொடுக்கல் வாங்கலில் வாக்குவாதம் செய்துள்ளார்.இதனால் கண்டக்டர் ஆத்திரத்தில் அவரை பஸ்ஸில் உள்ள அனைவரும் முன்னும் திட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் மது அருந்திவிட்டு நள்ளிரவில் இரண்டு மணி அளவில் அந்த பஸ்ஸை கடத்தியதுடன் நீலாங்கரை அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விட்டு நிற்காமல் சென்றதும் தெரிய வந்தது.அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News