தஞ்சாவூர் மாவட்டத்தில் குடல்புழு நீக்க மாத்திரை உட்கொண்ட பள்ளி மாணவி உயிரிழந்ததாக சர்ச்சை எழுந்த நிலை யில் அதற்கான காரணத்தை உடற்கூறாய்வுக்கு பிறகே உறுதியாகக் கூற முடியும் என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், சொக்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த கண்ணன்- பரிமளா தம்பதியின் மகள் கவிபாலா. இவர், பள்ளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்து வந்தார்.
தேசிய குடல்புழு நீக்க நாளையொட்டி அவருக்கு அல்பெண்டசோல் எனப்படும் குடற்புழு நீக்க மாத்திரை கடந்த திங்கள்கிழமை வழங்கப் பட்டது. அந்த மாத்திரையை உன்கொண்ட மாணவி சற்று நேரத்தில் மயக்கமடைந்தார். அதன் பின்னர், அவர் உயிரிழந்தார்.மாணவி உயிரிழப்புக்கு குடல்புழு நீக்க மாத் திரை காரணம் என்ற சர்ச்சை எழுந்தது.
இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது, உயிழந்த மாணவி படித்த அதே பள்ளியில் 380 மாணவர்கள் குடல்புழு மாத்திரையை உள்கொண்டனர். அந்தப்பகுதியில் மட்டும், 25,000 பேரும். மாநிலம் முழுதும் 2 லட்சம் பேரும் குடல்புழு நீக்க மாத்திரையை எடுத்து கொண்டனர். அவர்களில் எவருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. அதனால், மாத்திரையால் மாணவி உயிரி ழப்பு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூற முடியாது. அதற்கான வாய்ப்பும் குறைவு என கூறப்பட்டுள்ளது.