
அறுபடை வீடுகளில் ஒன்றாக இருக்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக இருந்து வருகிறது இந்த கோவிலில் நேற்று கடல் உள்வாங்கி இருக்கும் சம்பவம் பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது உண்மைதான்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே சனிக்கிழமை கடல் நீர் சுமார் 50 அடி உள்வாங்கியதால் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன.திருச்செந்தூர்கோயில் அருகே அமாவாசை மற்றும் பௌர்ணமி நாள்களில் கடல் நீர் உள்வாங்குவதும், இயல்பு நிலைக்குத் திரும்புவதும் வாடிக்கை.
மார்ச் 13, 14 ஆகிய இரு நாள்கள் பௌர்ணமி இருந்ததன் காரணமாக, சனிக்கிழமை கோயில் அருகே கடல் நீர் சுமார் 50 அடி தூரம் உள்வாங்கி பாசிபடர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. இருந்தபோதிலும் பக்தர்கள் வழக்கம் போல கடலில் நீ ராடினர்.