தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: தி.மு.க போலி பிரச்சாரம் செய்து வருகிறதா?

Update: 2025-03-23 12:45 GMT
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: தி.மு.க போலி பிரச்சாரம் செய்து வருகிறதா?

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னையில் நேற்று நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டு இருந்தார்கள். மேலும் இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டை குறிப்பாக பல்வேறு விதங்களில் வஞ்சிக்கும் கேரளா, கர்நாடகா மாநில தலைவர்களுக்கு தமிழக முதல் அமைச்சர் சிறப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் நிகழ்வை கண்டித்த நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தலைமையில் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது.


இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் கூறும் பொழுது நம் அண்டை மாநிலங்கள் நமக்கு பல்வேறு விதங்களில் பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக முல்லைப் பெரியாறு அணை விவகாரம், எல்லைப் பகுதிகளில் குப்பைகளை கொட்டுதல், எல்லைகள் ஆக்கிரமிப்பு போன்ற பல்வேறு விதங்களில் நமக்கும் கேரளாவிற்கும் பிரச்சனை இருக்கிறது. கர்நாடக மாநிலத்திற்கும், நமக்கும் காவேரி பிரச்சினை இன்றும் வரை முடிவிற்கு வரவில்லை. இத்தகைய சமயத்தில் தொகுதி மறு சீரமைப்பு எதிர்ப்பு என்ற போர்வையின் கீழ் திமுக அரசு அரசியல் நாடகம் நடத்தி வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் கூறியிருக்கிறார்.

மேலும் தொகுதி மறு சிறப்பு உபகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தெளிவாக கூறும் பொழுது, தொகுதி மறு சீரமைப்பில் எந்த ஒரு நாடாளுமன்ற தொகுதியும் குறைக்கப்படாது. குறிப்பாக தமிழகத்தில் எந்த ஒரு தொகுதிகளும் குறைக்கப்பட கிடையாது என்பது குறித்து தெளிவான விளக்கங்களை அளித்து இருந்தார். தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் பாஜக தெளிவாக விளக்கம் அளித்த பின்னும் திமுக போலி பிரச்சாரத்தை செய்து வருகிறது.

Tags:    

Similar News