வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசும் போலி ஏஐ வீடியோ குறித்து மத்திய அரசு வெளியிட்ட உண்மை தகவல்!

Update: 2025-05-10 13:17 GMT

இந்தியா பாகிஸ்தான் இடையே பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு போர் பதற்றம் அதிகமாகி உள்ளது, இந்தியா பல முக்கிய நடவடிக்கைகளை பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்து வருகிறது 

பாகிஸ்தான் பொதுமக்களை குறிவைத்து அத்துமீறல்களை மேற்கொள்கிறது அந்த முயற்சிகளை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது. அதே சமயத்தில் சமூக வலைதளங்களில் பல பொய்யான மற்றும் தவறான தகவல்கள் பரவி வருகிறது இந்தியாவின் முக்கிய இராணுவ தளவாடங்கள் பாகிஸ்தானால் தாக்கப்பட்டதாகவும் போதுமான உணவு இருப்பு இல்லை என்ற தகவல்களும் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது


அவற்றை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக மறுத்தது அந்த வரிசையில் தற்பொழுது மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மன்னிப்பு கேட்பது போன்ற ஒரு காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பேசுபவர்களாக மாறி வருகிறது ஆனால் இது முழுக்க முழுக்க தொழில்நுட்பத்தால் மேற்கொள்ளப்பட்ட காணொளி என்பதை பிரஸ் இன்ஃபோர்மேஷன் பீயிரோ கூறியுள்ளது சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ள வீடியோ முற்றிலும் பொய் என்பதையும் தெரிவித்துள்ளது 

Tags:    

Similar News