மீண்டும் இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 3,961 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் தமிழகம் உள்பட 3 மாநிலங்களில் தலா ஒருவர் பலியாகியுள்ளனர். 2019ம் ஆண்டு முதன்முறையாக பரவிய கொரோனா தொற்று காரணமாக, லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்த தொற்று பாதிப்பில் இருந்து மீண்ட மக்கள், கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், நாடு முழுதும் கொரோனா தொற்று பரவல் மெல்ல மெல்ல மறுபடியும் வேகமெடுத்துள்ளது.
சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளைப் போலவே இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த ஒரு நிலையில், நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 203 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதன் மூலம், இதுவரையில் 3,961 பேர் இந்தத் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர்.