ரயில்களில் வயதானவர்களுக்கு சலுகை வழங்கப்படுவதாக பரவி வரும் தகவல் - மத்திய அரசு கொடுத்த விளக்கம் என்ன? வெளியான விவரம்!

Update: 2022-06-17 07:50 GMT

இந்திய ரயில்வே மூத்த குடிமக்களுக்கான சலுகைகளை ஜூலை 1 முதல் மீண்டும் தொடங்கும் என்ற செய்தியை மத்திய அரசு மறுத்துள்ளது.

தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செய்தித் தகவல் பணியகம் (PIB) அதன் "உண்மை சரிபார்ப்பு"  சோதனை மூலம் இது குறித்து ட்வீட் செய்தது. ரயில்களில் மூத்த குடிமக்களுக்கான சலுகைகளை மீண்டும் தொடங்குவது தொடர்பான எந்த அறிவிப்பும் ரயில்வே அமைச்சகத்தால் வெளியிடப்படவில்லை. ரயில்வே அமைச்சகம் தற்போது உடல் ஊனமுற்றோர், நோயாளிகள் மற்றும் மாணவர்களுக்கு மட்டுமே சலுகைகளை வழங்குகிறது என்று மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

ஜூலை 1, 2022 முதல் ரயில்களில் மூத்த குடிமக்களுக்கான சலுகைகள் மீண்டும் தொடங்கப்படும் என்று சில ஊடகங்களில் செய்திகள் வந்ததை அடுத்து இந்த தெளிவுபடுத்தல் அறிவிப்பை வெளியிடப்பட்டது. PIB இந்த செய்தியை "போலி" என்று கூறியது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக 2020 மார்ச் மாதத்தில் மூத்த குடிமக்களுக்கு சலுகைகளை ரத்து செய்த அமைச்சகம் இன்னும் அதனை மறு சீரமைப்புக்கு கொண்டு வரவில்லை என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

தொற்றுநோய்க்கு முன், இந்திய ரயில்வே அனைத்து வகுப்புகளிலும் பெண் பயணிகளுக்கு 50 சதவீதமும், ஆண் பயணிகளுக்கு 40 சதவீதமும் தள்ளுபடி வழங்கியது. இந்தச் சலுகையைப் பெறுவதற்கான குறைந்தபட்ச வயது பெண்களுக்கு 58 ஆண்டுகள் மற்றும் ஆண்களுக்கு 60 ஆண்டுகளாகும். 

Similar News