#FactCheck - வட இந்தியாவில் ஸ்டாலின் அலை என பரப்பப்படும் தகவல் - உண்மையா?

குறிப்பாக, தமிழ் ஊடகங்களில், கலைஞர் செய்திகள் மற்றும் விடுதலை போன்ற திமுக சார்பு ஊடகங்களில் மட்டுமே இந்த செய்தி பரவலாக வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2022-01-17 02:51 GMT

"வட இந்தியா முழுவதும் மு.க.ஸ்டாலின் அலை... தேசியத் தலைவர் மு.க.ஸ்டாலின்" - விடுதலை நாளேடு பாராட்டு! என்ற தலைப்பின் கீழ் கலைஞர் செய்திகள் ஊடகம், குறிப்பிட்ட பதிவை வைரலாக்கி வருகிறது. குறிப்பாக, தமிழ் ஊடகங்களில், கலைஞர் செய்திகள் மற்றும் விடுதலை போன்ற தி.மு.க சார்பு ஊடகங்களில் மட்டுமே இந்த செய்தி பரவலாக வெளியிடப்பட்டுள்ளது. மற்ற ஊடகங்களில் இதற்கான தரவை முழுவதுமாக காண முடியவில்லை. இதன் உண்மை தன்மை குறித்து எங்கள் கதிர் ஊடக குழுவினர் தேடலை துவங்கினோம்.

பரவி வரும் தகவல்:


திமுக சார்பு ஊடகமான விடுதலை நாளேடு கடந்த ஜனவரி 11-ஆம் தேதி, "27% இடஒதுக்கீடு - வட இந்தியா முழுவதும் மு.க.ஸ்டாலின் அலை! "சமூகநீதிக்கான வெற்றியைக் கொண்டாடும் வட இந்தியர்கள்!"என்ற தலைப்பின் கீழ் செய்தி வெளியிட்டுள்ளது.


விடுதலை நாளேடு வெளியிட்ட செய்தியை மேற்கோள் காட்டி, அடுத்த இரண்டே நாளில், ஜனவரி 13-ஆம் தேதியன்று, கலைஞர் செய்திகள் ஊடகம், "வட இந்தியா முழுவதும் மு.க.ஸ்டாலின் அலை... தேசியத் தலைவர் மு.க.ஸ்டாலின்" - விடுதலை நாளேடு பாராட்டு! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது.

உண்மை சரிபார்ப்பு:

சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் இந்த செய்தி தேடலை துவங்கினோம். குறிப்பிட்ட பதிவுகள், "சமூக நீதிக்கான ஸ்டாலின்" என்ற பொருள்படும் வகையில் #Stalin4SocialJustice என்ற ஹேஷ்டேக் கீழ் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஹேஸ்டேக்குகள் எப்படி ட்ரெண்ட் ஆனது என்பதை சமூக வலைதளங்களில் தேடிப்பார்த்த பொழுது, இது திட்டமிட்ட பரப்புரை என்பது தெரிய வந்துள்ளது. மக்கள் தாமாகவே முன்வந்து, #Stalin4SocialJustice என்ற ஹேஷ்டேக்கின் கீழ் பதிவிடவில்லை. பெரியாரிஸ்ட் மற்றும் அம்பேத்கர் ஆதரவாளர்கள் பகிர்ந்த பதிவுகளை மேற்கோள் காட்டி, வட இந்தியா முழுவதும், ஸ்டாலின் அலை வீசுவது போல, விடுதலை நாளேடு சித்தரித்துள்ளது. அதற்கான சில ஸ்கிரீன் ஷாட்டுகளை கீழே இணைத்துள்ளோம்.






சொல்லி வைத்தது போலவே, எல்லா பதிவுகளிலும், #Stalin4SocialJusticeஎன்ற ஹேஷ்டேக், தி.மு.க எம்பி பெயரும், தமிழக முதல்வரின் ட்விட்டர் கணக்கும் இணைக்கப்பட்டுள்ளது. டூல்கிட்டுகளை வைத்து, ஒரு பதிவை வைரலாக்கும் முறையின் மூலம் மட்டுமே இவ்வாறு துல்லியமாக செய்ய முடியும்.

சோதனைக்காக மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், மத்திய பிரதேஷ், உத்திர பிரதேசம், டெல்லி, பீகார் போன்ற மாநிலங்களில் இயங்கும் சமூக வலைதளங்கள செயல்பாட்டாளர்களின் கருத்தை அறிய முன் வந்தோம். 90 பேருடன் பேசியதில் அதில் ஒரே ஒருவருக்கு தான் மு.க.ஸ்டாலினை தெரிந்துள்ளது. மற்ற 89 பேருக்கு மு.க.ஸ்டாலின் என்பது யார் என்றும் அவர் தமிழக முதல்வர் என்பதுமே தெரியவில்லை. விடுதலை நாளேடு குறிப்பிட்டது போல, ஸ்டாலின் அலை உருவாகவில்லை. உருவானது போல சித்தரிக்கப்பட்டுள்ளது இதன் மூலம் உறுதியாகிறது.

முடிவு:

"வட இந்தியா முழுவதும் மு.க.ஸ்டாலின் அலை... தேசியத் தலைவர் மு.க.ஸ்டாலின்" - விடுதலை நாளேடு பாராட்டு! என்ற தலைப்பின் கீழ் பகிரப்பட்டு வரும் செய்தி, மிகைப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்ட, ஒரு கட்சி சார்பு ஊடகத்தின் செய்தி. எனவே இது போலி செய்தி என்பது முடிவாகிறது.

Tags:    

Similar News